தமிழக சட்டசபை பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடியது. கூட்டம் கூடியதும் முதலமைச்சர் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு முன்மொழிந்தார். இதனை தொடர்ந்து, முதலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக வெற்றிப் கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்தது. இதனை தொடர்ந்து, உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக, காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு காங்கிரஸின் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மேலும், வெறுப்பு அரசியல் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கும் சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும், பெண்கள் பாதுகாப்பு 200 மின் இலவச மின்சாரம் மதுபான கடைகளை மூடும் உத்தரவுக்கு காங்கிரஸ் வரவேற்கிறது என்றும், உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.

