தமிழக சட்டசபை இன்று கூடியது. சட்டசபை நிறைவடைந்த உடன் முதலமைச்சர் விஜய் அரசியல் நாகரீகத்தை வெளிப்படுத்துவதற்காக மரியாதை நிமித்தமாக ஒவ்வொரு எதிர்க்கட்சி தலைவர்களையும் அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.
அந்த வகையில், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு க ஸ்டாலினை முதலில் சந்தித்தார். அவரை தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். வைகோவை தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் அவர்கள் நீலாங்கரையில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வீட்டிற்கு நேரில் சென்றார்.
முதலமைச்சர் விஜய் அன்புமணி ராமதாஸ் அவரது மனைவி சௌமியா அன்பு மணியும் வாசலுக்கே நேரில் வந்து வரவேற்றுனர். பின்னர், அன்புமணி ராமதாஸ் இடம் முதலமைச்சர் விஜய் வாழ்த்து பெற்றார்.
அங்கு அவருக்கு சிறிது தேநீர் விருந்தும் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அன்புமணி ராமதாஸ் குடும்ப உறுப்பினர்கள் முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.

