Close Menu
    What's Hot

    சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்.. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் கோவக்காயின் நன்மைகள்..!

    September 28, 2026

    தங்கத்தை விட தரமான பால் தான்.. எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழிசை..!

    September 28, 2026

    “மதுரை வந்தடைந்த முதலமைச்சர் விஜய்!” – உற்சாகத்தில் கோஷமிட்ட ரசிகர்கள்..!

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»இது நம் அனைவருக்குமான அரசு.. ஆதவ் அர்ஜுனா பதிவிட்ட வைரல் பதிவு..!
    தமிழ்நாடு

    இது நம் அனைவருக்குமான அரசு.. ஆதவ் அர்ஜுனா பதிவிட்ட வைரல் பதிவு..!

    Prime ReporterBy Prime ReporterMay 11, 2026Updated:May 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    adhav-arjuna-praise-cm-vijay-inclusive-government
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஆதவ் அர்ஜுனா ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு,

    தமிழ்நாடு என்றும் தனித்துவ வரலாற்றுக்குச் சிறப்புப் பெற்றது. ‘தமிழும் அறமுமே’ தமிழ் நிலத்தின் வரலாற்றை இயக்கி வந்திருக்கின்றன. இனி தமிழ்நாட்டின் வருங்காலத்தையும் வழிநடத்தப்போகின்றன. அத்தகைய மகத்தான காலத்தின் பொறுப்பைத் தமிழக வெற்றிக் கழகத்திற்கும், கழகத் தலைவர் அவர்கள் தலைமையிலான நமது ஆட்சிக்கும் அளித்துள்ள தமிழ்நாடு மக்களைப் போற்றுகிறேன். ‘நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு நாம் ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்துள்ளோம்.

    அவர்கள் நமக்கான ஆட்சியைக் கொடுப்பார்கள்’ என்று தமிழ்நாடு மக்கள் வாழ்த்தி எங்களுக்கு இந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் நம்பிக்கை ஒருபோதும் பொய்க்காது என்று தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் வீட்டுப் பிள்ளைகள் உங்களுக்காகப் பணி செய்து, உங்களைப் பெருமையடைய செய்வார்கள். அனைத்தையும் நாம் பார்க்கத்தானே போகிறோம்.

    மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் பொறுப்பேற்றவுடன், வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (500 யூனிட்டுக்குள்) இரு மாதங்களுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், சிங்கப்பெண் அதிரடிப்படை, போதைப் பொருள் தடுப்புப் படை என எளிய மக்களுக்கான நலன், பெண்கள் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களுக்கான நல்வாழ்வு ஆகிய குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களை அமல்படுத்தியுள்ளார்.

    இனி இதுபோல் தொடர்ந்து அனைத்து தரப்பு மக்களுக்கான நலத்திட்டங்களையும் உரிமைகளையும் நம் முதல்வர் அவர்கள் நிறைவேற்றுவார். பதவியேற்ற பிறகு, சட்டமன்றத்திற்குச் சென்று மக்கள் அளித்த ஜனநாயக அரசாட்சி உத்தரவை ஏற்றார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். பிறகு, அரசின் செயல்திட்டம் குறித்து ஆய்வு செய்தார்.

    அடுத்து, நம் கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் நினைவிடத்திற்கு முதல்வர், அமைச்சர்கள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தோழர்கள் ஆகியோர் சென்று மரியாதை மற்றும் வீரவணக்கம் செலுத்தினோம். பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் திரு. கி. வீரமணி அவர்களை முதல்வருடன் சென்று சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றோம்.

    நம் கழக அரசு தந்தை பெரியார் காட்டிய கொள்கைப் பாதையில், எந்தவித சமரசத்திற்கும் இடமின்றி பயணிக்கும் என்று தெரிவித்து மகிழ்ந்தோம். ‘ஆதவ் அர்ஜுனா எனும் நான்’ என்று தமிழ்நாடு அரசின் அமைச்சராக நேற்று நான் பதவியேற்றபோது, தமிழ்நாட்டு வரலாற்றின் மேன்மையையும், தமிழக மக்களான உங்களின் அன்பையுமே எனது குரலாக வெளிப்படுத்தினேன்.

    இது, என் தனியொருவனின் குரல் அல்ல. நம் அனைவரின் கூட்டு முழக்கம். கழகத் தலைவர் – தமிழ்நாடு முதல்வர் அண்ணன் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான ஆட்சி நம் அனைவருக்குமானதாக இருக்கும். அறம் ஓங்கும்! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்நாடு!

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    தமிழ்நாடு என்றும் தனித்துவ வரலாற்றுக்குச் சிறப்புப் பெற்றது. 'தமிழும் அறமுமே' தமிழ் நிலத்தின் வரலாற்றை இயக்கி வந்திருக்கின்றன. இனி தமிழ்நாட்டின் வருங்காலத்தையும் வழிநடத்தப்போகின்றன.

    அத்தகைய மகத்தான காலத்தின் பொறுப்பைத் தமிழக வெற்றிக் கழகத்திற்கும், கழகத் தலைவர் அவர்கள்… pic.twitter.com/x8eldT8SCQ

    — Aadhav Arjuna (@AadhavArjuna) May 11, 2026

    17-வது சட்டப்பேரவை ஆட்சி 17th Assembly Governance Adhav Arjuna on CM Vijay Adhav Arjuna Social Media Post CM Vijay Inclusive Government Tamil Nadu politics 2026 TVK VCK Relationship News VCK Adhav Arjuna Statement ஆதவ் அர்ஜுனா - முதல்வர் விஜய் ஆதவ் அர்ஜுனா சமூக வலைதள பதிவு தமிழக அரசியல் 2026 தவெக விசிக அரசியல் உறவு முதல்வர் விஜய்யின் மக்கள் அரசு விசிக ஆதவ் அர்ஜுனா கருத்து
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தங்கத்தை விட தரமான பால் தான்.. எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழிசை..!

    September 28, 2026

    “மதுரை வந்தடைந்த முதலமைச்சர் விஜய்!” – உற்சாகத்தில் கோஷமிட்ட ரசிகர்கள்..!

    September 28, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: புதிய திருப்பம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்.. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் கோவக்காயின் நன்மைகள்..!

    September 28, 2026

    தங்கத்தை விட தரமான பால் தான்.. எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழிசை..!

    September 28, 2026

    “மதுரை வந்தடைந்த முதலமைச்சர் விஜய்!” – உற்சாகத்தில் கோஷமிட்ட ரசிகர்கள்..!

    September 28, 2026

    சங்கிலியால் கட்டுவது சரியா?.. விலங்குகள் நலனுக்காகக் குரல் கொடுக்கும் நடிகை சந்தியா..!

    September 28, 2026
    Don't Miss

    சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்.. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் கோவக்காயின் நன்மைகள்..!

    September 28, 2026

    நம் பாரம்பரிய சமையலில் இடம்பெறும் கோவக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைச் சீராகப் பராமரிக்கவும் பெரிதும் உதவுகிறது.

    தங்கத்தை விட தரமான பால் தான்.. எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழிசை..!

    September 28, 2026

    “மதுரை வந்தடைந்த முதலமைச்சர் விஜய்!” – உற்சாகத்தில் கோஷமிட்ட ரசிகர்கள்..!

    September 28, 2026

    சங்கிலியால் கட்டுவது சரியா?.. விலங்குகள் நலனுக்காகக் குரல் கொடுக்கும் நடிகை சந்தியா..!

    September 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.