தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பே தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. விஜயின் தமிழக வெற்றிக்கழகம் மொத்தம் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இது மட்டும் இல்லாமல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்ததை அடுத்து தற்பொழுது, 112 எம்எல்ஏக்களையும் தன்வசம் வைத்துள்ளார்கள்.
அதே நேரத்தில், விஜய் மே மாதம் ஏழாம் தேதி காலை 11:30 மணிக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இதற்காக, நேரு உள்விளையாட்டு அரங்கம் மிகவும் பிரம்மாண்டமான முறையில், ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதை போல், சட்டமன்றமும் புதுப்பொலிவுடன் தயாராகிக் கொண்டு இருக்கிறது.
முன்னதாக, காங்கிரஸ் ஆதரவு அளித்தது 113 எம்எல்ஏக்களின் ஆதரவு தமிழக வெற்றிக் கழகத்திற்கு கிடைத்துள்ளது. 118 என்ற மேஜிக் எண் பெற இன்னும் ஐந்து இடங்கள் தேவைப்படுகிறது என்ற நிலையில் கவர்னரை சந்தித்து விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்தார். அவருடன் புசி ஆனந்த், செங்கோட்டையன், ஆதாவ் அர்ச்சனா, உள்ளிட்ட நிர்வாகிகளுடன் சென்ற விஜய் கவர்னரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த நிலையில், தற்போது விஜய் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஆளுநரே விஜய் ஸ்டைலில்தான் இருக்காரே.. ஆட்சி அமைக்க உரிமை கோரிய TVK..!
அதாவது, மெஜாரிட்டிக்கான முழு பட்டியலை கொடுக்கவில்லை என்பதால், கவர்னர் அழைப்பு விடுப்பதை தாமதப்படுத்துவதாக சொல்லப்படுகிறது. பெரும்பான்மை உள்ள 118 எம்எல்ஏக்களின் பட்டியலை தருமாறு விஜய்யிடம் கவர்னர் கேட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. தனிப்பெரும் கட்சியாக இருந்தால் வழக்கமாக கவர்னர் அழைப்பு விடுப்பதே மரபாக இருந்த நிலையில், தற்போது கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

