Close Menu
    What's Hot

    ‘அந்த’ ஒரு துண்டு ரகசியம்.. நாவூறும் ஐயங்கார் ஸ்டைல் வெந்தயப் புளிக் குழம்பு ரெசிபி..!

    June 23, 2026

    ஆண்களை விட பெண்களுக்கு ‘அந்த’ விஷயம் அதிகமா?.. வியப்பூட்டும் அறிவியல் உண்மைகள்..!

    June 23, 2026

    பெப்சி உமாவா இது?.. 90 கிட்ஸின் கனவு கன்னியின் ரீசன்ட் கிளிக்..!

    June 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»“சேவல் கொடி பறக்குது” – தவெக வெற்றிக்காக நேர்த்திக்கடன் செலுத்திய வேல்முருகன்!
    கோவை

    “சேவல் கொடி பறக்குது” – தவெக வெற்றிக்காக நேர்த்திக்கடன் செலுத்திய வேல்முருகன்!

    Prime ReporterBy Prime ReporterMay 5, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Singer Velmurugan Celebrates Vijay TVK Victory Marudhamalai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads


    சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், கோவையின் ஆன்மீக அடையாளமான மருதமலை முருகன் கோயிலுக்கு இன்று பிரபல நாட்டுப்புறக் கலைஞரும் பாடகருமான வேல்முருகன் வருகை தந்தார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தேர்தல் வெற்றியை தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய்க்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வகையில் அவர் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். பக்திப் பரவசத்துடன் தனது தனித்துவமான குரலில் “சேவல் கொடி பறக்குது… சேவல் கொடி பறக்குது…” என்ற பாடலைப் பாடினார்.

    தவெக வெற்றியால் குஷியான வழக்கறிஞர்கள்.. பட்டாசு வெடித்து வழக்கறிஞர்கள் மாஸ் கொண்டாட்டம்..!


    தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இடம்பெற்று உள்ள சேவல் சின்னத்தையும், அதன் வெற்றியைத் தீர்மானிக்கும் வேகத்தையும் மையமாக வைத்து இந்தப் பாடலை அவர் பாடியது அங்கு இருந்த பக்தர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
    ​தமிழக அரசியலில் ஏற்பட்டு உள்ள இந்த புதிய மாற்றத்தையும், நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்தையும் மனதாரப் பாராட்டிய வேல்முருகன், “மக்களின் ஆதரவோடு இந்த வெற்றிப் பயணம் தொடர வேண்டும்” என மருதமலை முருகனிடம் வேண்டினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாடகர் வேல்முருகன் பேசும்போது;

    ராஜ அலங்காரத்தில் செவ்வாய்க்கிழமை மருதமலை முருகனை தரிசித்தது சந்தோஷம் என்றும், அதுவும் எந்த ஊருக்கு சென்றாலும் முருகர் கோவில் அருகில் எங்கு இருந்தாலும் போய் மக்களோடு, மக்களாக தரிசனம் செய்து முருகன் அருள் பெறுவது சந்தோஷம், அதில் இன்று உச்சிகால பூஜையில், முருகனை பார்த்து தரிசனம் செய்தது மிகவும் சந்தோஷம், நான் இங்கு தான் படித்தேன், அதனால் வாரம், வாரம் வந்து மருதமலை முருகனை பார்த்து விடுவேன் என்றும், ஆனால் இன்று மருதமலை முருகன் இந்த அளவிற்கு சினிமாவில் பாடி, மக்களுக்கு தெரிகிற அளவிற்கு வாழ வைத்துக் கொண்டு உள்ளார் எனவும், அதனால் முருகனை எப்போது கோவை வந்தாலும் அவருடைய கண்கொள்ளா காட்சியை பார்த்து விட்டு அருள் கிடைப்பது மிகப்பெரிய சந்தோஷம் என்றார்.

    மேலும் ராஜா அலங்காரத்தில் பார்த்தது சந்தோசம் என்றார். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்றார். தமிழக வெற்றி கழகம் ஆரம்பிக்கும் போது பாடல் பாடினீர்கள், இன்று வெற்றி பெற்றது குறித்தான கேள்விக்கு மக்கள் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்த்தார்கள் என்றும், மக்கள் பெருவாரியான வாக்குகளை கொடுத்து இன்று வெற்றி பெற வைத்து உள்ளார்கள். மிகவும் சந்தோசம் என்றவர், அதுவும் மருதமலை முருகன் பாடலை தான் அங்கு பாடினேன் என்று கூறியவர்.”சக்தி திருமகனை, முத்துக்குமரனை மறவேன்…. நான் மறவேன்… பக்தி கடலென…. பக்தி பதிவிட வருவேன்…. நான் வருவேன்… பரமனின் திருமகன்…. அழகிய தமிழ் மகனே. என்ற பாடல் வரிகளை பாடினார்.


    இந்த செவ்வாய்க்கிழமை முருகனிடம் வேண்டிக் கொண்டு எனது ராசியும், அவரது ராசியும் ஒன்று என்றார். அவர் நட்சத்திரம் எனது நட்சத்திரம் ஒன்று என்றவர், அதேபோன்று செவ்வாய்க்கிழமை அவர் வெற்றி பெற்றதற்காகவும், கண்டிப்பாக தான் முருகனிடம் வேண்டிக் கொண்டதாக கூறியவர், அதேபோன்று இதே பாடலை பாடி தான் சிறப்பாகவும் இருந்ததாக கூறினார்.

    மேலும் முருகன் தான் அங்கு பாட வைத்ததாக கூறியவர், அதேபோன்று ஆறுபடை முருகன் பெரிய வெற்றி கொடுத்ததாக கூறியவர், முருகன் சோதிப்பாரே தவிர, கைவிடமாட்டார் என்றார். முருகரை நம்புகிறவர்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்றார்.


    த.வெ.க-வில் ஜெயித்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.தளபதிக்காக சென்று பாடியது தனக்கு ரொம்ப சந்தோஷம், மகிழ்ச்சி அளவில்லாத சந்தோசமாக உள்ளதாக கூறினார். புதிய பாடங்களில் பாடுவது குறித்தான கேள்விக்கு; மகுடம் படம், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடி கொண்டு உள்ளதாக கூறினார்.விஜய் நடித்த படங்கள் வருங்காலத்தில் மக்களிடம் வரவேற்பு எப்படி ? இருக்கும் என்ற கேள்விக்கு ; மக்கள் அவர் படங்களை எப்படி ? கொண்டாடி வரவேற்கிறார்களோ ?அதே போன்று அவர் படத்தையும் மேலும் வரவேற்பார்கள் அதனால் தான் மக்கள் அவருடைய படம் எப்ப வந்தாலும், ரீ ரிலீஸ் ஆனாலும் பெரிய வெற்றி தான் என்றார்.

    சினிமா துறைகளில் அரசியல் தலையீடு உரித்தான கேள்விக்கு,அவர் ஒவ்வொரு படம் நடிக்கும் போது 5,000 குடும்பங்கள் வாழ்ந்து கொண்டு உள்ளதாகவும், இன்று அரசியல் வந்து விட்டார். நாட்டு மக்கள் அனைவரும் நல்லா வாழப் போகிறார்கள் என்றவர், அதேபோன்று சினிமாவும் நன்றாக, பயங்கரமாக இருக்கும் என்றும், ஏன்னா ? அங்கு இருந்து அவர் வந்தவர் கஷ்ட, நஷ்டங்கள் எல்லாமே அவருக்கு தெரியும். அதனால் சினிமாவையும் சிறப்பாக வைத்து இருப்பார். தமிழக மக்களையும் சிறப்பாக வைத்து இருப்பார் என்றார்.


    நடிகர் விஜயகாந்த் அடுத்ததாக விஜய் எப்படி ? இருப்பார் என்ற கேள்விக்கு
    அவருடைய தம்பி தான். அதனால் அவர் எப்படியோ ? அதேபோன்று அவர் ஆசிர்வாதம் பெற்று அவர் வழி நடத்துவார். நல்லதே நடக்கும் என்றார்.

    Marudhamalai Murugan Temple Singer Velmurugan TVK Tamil Nadu Political Change 2026 TVK Victory Song Velmurugan Interview Coimbatore Vijay and Vijayakanth Comparison Vijay Election Victory Celebration தமிழக அரசியல் மாற்றம் 2026 தவெக வெற்றிப் பாடல் பாடகர் வேல்முருகன் தவெக மருதமலை முருகன் கோவில் விஜய் தேர்தல் வெற்றி கொண்டாட்டம் விஜய் மற்றும் விஜயகாந்த் வேல்முருகன் பேட்டி கோவை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கழுத்தில் இருந்த 3¼ பவுன் தங்க சங்கிலி.. பணத்தாசையால் பாசத்தைக் கொன்ற மகன்..!

    June 23, 2026

    ரூ.10 கோடி தங்கம், வெள்ளியுடன் எஸ்கேப்.. பல மாநிலங்களில் கைவரிசை காட்டிய ‘நம்பர் 1’ திருடர்கள்..!

    June 23, 2026

    பைக் இப்படியா ஓட்டுறது?.. ஆத்துப்பாலத்தில் அரங்கேறிய கொடூர விபத்து..!

    June 23, 2026

    ரகசிய ஆபரேஷன் 4 ½ கிலோ கஞ்சா பறிமுதல்.. போலீசாரின் அதிரடி வேட்டை..!

    June 22, 2026

    கண் இமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. குழந்தைகளுடன் நின்ற தந்தை மீது அசுர வேகத்தில் மோதிய ஆட்டோ..!

    June 22, 2026

    திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றத்தடை?.. அர்ஜுன் சம்பத் கண்டனம்..!

    June 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் பேசுனதுல 10 ரீல்ஸ் தேறும் – உதயநிதி ஸ்டாலின் காட்டம்..!

    June 23, 2026

    ரூ.10 கோடி தங்கம், வெள்ளியுடன் எஸ்கேப்.. பல மாநிலங்களில் கைவரிசை காட்டிய ‘நம்பர் 1’ திருடர்கள்..!

    June 23, 2026

    ‘அந்த’ ஒரு துண்டு ரகசியம்.. நாவூறும் ஐயங்கார் ஸ்டைல் வெந்தயப் புளிக் குழம்பு ரெசிபி..!

    June 23, 2026

    ஆண்களை விட பெண்களுக்கு ‘அந்த’ விஷயம் அதிகமா?.. வியப்பூட்டும் அறிவியல் உண்மைகள்..!

    June 23, 2026

    பெப்சி உமாவா இது?.. 90 கிட்ஸின் கனவு கன்னியின் ரீசன்ட் கிளிக்..!

    June 23, 2026
    Don't Miss

    ‘அந்த’ ஒரு துண்டு ரகசியம்.. நாவூறும் ஐயங்கார் ஸ்டைல் வெந்தயப் புளிக் குழம்பு ரெசிபி..!

    June 23, 2026

    வெங்காயம், பூண்டு இல்லாமல் வறுத்து அரைத்த பாரம்பரிய மசாலாவில் மணக்க மணக்கச் செய்யப்படும் ஐயங்கார் ஸ்டைல் வெந்தயப் புளிக் குழம்பு ரெசிபி.

    ஆண்களை விட பெண்களுக்கு ‘அந்த’ விஷயம் அதிகமா?.. வியப்பூட்டும் அறிவியல் உண்மைகள்..!

    June 23, 2026

    பெப்சி உமாவா இது?.. 90 கிட்ஸின் கனவு கன்னியின் ரீசன்ட் கிளிக்..!

    June 23, 2026

    “பார்ட்டி ஃபண்ட்” கதறி அழும் எதிர்க்கட்சிகள்… போக்கிரி சீனை ரீக்ரியேட் பண்ண முதல்வர்..!

    June 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.