அஜித்தின் அண்ணன் அனில் குமார் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இதுமட்டும் இல்லாமல் இந்த படத்திற்காக அவர் தனது உடல் எடையும் குறைத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், விஜய் ரசிகர்களை நெட்டிசன்கள் அணில் என்று விமர்சிக்கிறார்கள். சில விஜய் ரசிகர்களும் கூடமே ஆம் நாங்கள் அணில்தான். அணில் என்ற வார்த்தையை எந்த இடத்தில் பயன்படுத்தினார்கள் என்று தெரியாமல் விமர்சிக்க வேண்டாம் என்று கூறியும் பதிலடி எல்லாம் கொடுத்து வருகின்றனர். இப்படி இருக்கையில், அஜித்தின் சகோதரர் பெயர் அனில்குமார் என்பதால் இதை பார்த்த நெட்டிசன் ஒருவர் அஜித் வீட்டிலே ஒரு அணிலா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த போஸ்ட் அஜித்தின் சகோதரர் அணில் குமார் கண்களில் பட அவர் தனது ஸ்டைலில் பதிலடியும் கொடுத்திருக்கிறார். அதாவது, நான் அணில் குமார் இல்லை அனில் குமார் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல் எறிய வேண்டாம் நீங்கள் சண்டை செய்ய விரும்பினால் துப்பாக்கி சண்டைக்கு கத்தியை எடுத்துக்கொண்டு செல்லவேண்டும்.

ஆனால், அப்படி கத்தியுடன் தான் செல்வேன் என்றால் கடுமையாக நீங்கள் தாக்கப்படுவீர்கள் என்று கூறியுள்ளார். இவரது, இந்த பதிவை பார்த்த சிலர் பார்த்து போது பஞ்சர் ஆகிவிடுவாய் என்பதைத்தான் தனது ஸ்டைலில் மிகவும் நாகரிகமாக கூறியிருக்கிறார் என்று கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.

