Close Menu
    What's Hot

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»விடாத தலைவலியும் சோர்வும் இருக்கா?.. இந்த அறிகுறியாக கூட இருக்கலாம்.. ஜாக்கிரதை..!
    ஆரோக்கியம்

    விடாத தலைவலியும் சோர்வும் இருக்கா?.. இந்த அறிகுறியாக கூட இருக்கலாம்.. ஜாக்கிரதை..!

    Prime ReporterBy Prime ReporterApril 27, 2026Updated:April 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Signs Of Dehydration Summer Care Tips Tamil
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக உலகம் மட்டுமல்லாமல் நம் உடலும் நீரின்றி அமையாதது. தான் நீரின் முக்கியத்துவத்தை நாம் நன்கு அறிந்திருந்தால், தினமும் நாம் போதுமான தண்ணீரை குடிக்கிறோமா என்ற என்பது கேள்விக்குறிதான். தினமும் நீர் அருந்துவது பெரும்பாலும் தாகம் எடுப்பதை பொருத்தே அமைகின்றது. ஆனால், அந்த தருணம் வரும்போது நீங்கள் ஏற்கனவே நீச்சத்து குறைபாட்டை நோக்கி பயணிக்க தொடங்கி இருக்கும்.

    Signs Of Dehydration Summer Care Tips Tamil

    அதுவும் கோடை காலம் தொடங்கிவிட்டது என்றால் நீரிழப்பு என்பது பெரும்பாலான மக்களின் எளிதில் தாக்கும் நோயாகவே மாறி இருக்கிறது. நீரிழிப்பு என்பது சிறிய பிரச்சனையாக தொடங்கி நாள் அடைவில் பல ஆபத்துக்களை உங்கள் உடலில் ஏற்படுத்தும். நீர் தேவைப்படும் போது உங்கள் உடலுக்கு விசித்திரமான சிக்னல்களை அனுப்பக்கூடும். இந்த அறிகுறிகளை ஆரம்பத்திலே நீங்கள் அறிந்தால் தண்ணீரை குடித்து பெரிய ஆபத்துக்களை தவிர்க்கலாம். இந்த பதிவில் உங்கள் உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லை என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

    உணவில் அடிக்கடி தேங்காய் சட்னி.. அப்போ ‘இந்த’ நன்மைகள் உங்களுக்குத்தான்..!

    தலைவலி

    Signs Of Dehydration Summer Care Tips Tamil

    ஒருவருக்கு தலைவலியோ அல்லது ஒற்றைத் தலைவலியோ பாடாய்படுத்தினால் மருந்துகளை உட்கொள்வதற்கு பதிலாக தண்ணீர் அதிகமாக குடிக்க முயற்சி செய்யுங்கள். உடலில் நீர்ச்சத்து குறையும் போது மூளையில் சூழ்ந்துள்ள திரவத்தின் அளவு குறைந்து மூளை சற்று சுருங்கி மண்டை ஓட்டிலிருந்து விலகிச் செல்கிறது. ஒரு நபர் போதுமான அளவு நீர் அருந்தும் வரை நீடிக்கும் இத்தகைய நிலையை நீர்ச்சத்து குறைவினால் ஏற்படும் தலைவலி.

    தலைவலிக்காக மற்ற காரணங்களை சோதிக்கும் முன் முதலில் தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    களைப்பு

    Signs Of Dehydration Summer Care Tips Tamil

    உங்கள் உடலில் நீர் சத்து குறையும்போது இயல்பாகவே நீங்கள் சோர்வுற்று காணப்படுவீர்கள். தேவையான அளவைவிட குறைந்த அளவு நீர்ச்சத்தை கொண்ட உடல் இயங்க முயலும் போது அது சோர்வு மற்றும் ஆற்றல் குறைவு போன்ற சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.

    இரவில் நன்றாக உறங்கிய பிறகும் நீங்கள் சோர்வாகவும் மந்தமாகவும் இருப்பதாக நினைத்தால் நீங்கள் அருந்தும் நீரின் அளவை அதிகரிப்பது. அந்த மந்த நிலையில் இருந்து உங்களை விரைவில் விடுவிக்க உதவுகிறது.

    மலச்சிக்கல்

    Signs Of Dehydration Summer Care Tips Tamil

    உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இல்லாமல் இருந்தால், அதற்கு காரணம் உங்கள் உடலில் இருக்கும் நீரின் அளவு தான். இருப்பினும் போதுமான அளவு நீர் அருந்தாவிட்டால், உங்கள் உடல் மலத்தில் இருந்து நீரை உறிஞ்சி கொள்கிறது. மலம் கழித்தால் கடினமாகவும் சீரற்றதாகவும் அல்லது எப்போதாவது ஒரு முறையே நிகழும் போது உங்கள் நீர் அருந்தும் அளவை அதிகரிக்க வேண்டும் என்பது உங்களுக்கு கொடுக்கப்படும் எச்சரிக்கை.

    நச்சுக்களின் தேக்கம்

    Signs Of Dehydration Summer Care Tips Tamil

    மனித உடல் ஒரு இயந்திரத்தை போன்றது. அது கழிவு பொருட்களை தொடர்ந்து வடிகட்டி வெளியேற்றுகிறது. இருப்பினும், அந்த கழிவு நீக்க செயல்முறைகள் சீராக நடைபெறுவதில்லை என்றால், அது வடிவமைக்கப்பட்ட விதத்தில் இருந்து செயல்பாட்டை முற்றிலும் மாறுபடுகிறது. இதன் விளைவாக அந்த நச்சுக்கள் உடலில் இருக்க வேண்டிய கால அளவை விட நீண்ட நேரம் தங்கிவிடும். இதனால், உங்கள் ஆரோக்கியம் பல வழிகளில் பாதிக்கக்கூடும்.

    அதிக பசி

    Signs Of Dehydration Summer Care Tips Tamil

    தாகமாக உணர்வதற்கும் பசியாக உணர்வதற்கும் இடையிலான வித்தியாசம் உள்ளது. நீங்கள் நினைப்பது போல அவ்வளவு சிக்கலானது அல்ல. உங்களுக்கு ஏதேனும் நொறுக்கு தீனி சாப்பிட வேண்டும் என்று தோன்றும் சமயங்களில் உண்மையில் நீங்கள் நீர்ச்சத்தை இழந்திருக்கவே அதிக வாய்ப்பு இருக்ககூடும். சிப்ஸ் போன்ற திண் பண்டங்களை நாடி செல்வதற்கு பதிலாக ஒரு குவளை தண்ணீர் அருந்தி பாருங்கள். அந்த பசை உணர்வு உடனடியாக மறந்து விட அதிக வாய்ப்பு இருக்கிறது.

    சிறுநீர்

    Signs Of Dehydration Summer Care Tips Tamil

    கழிப்பதில் மாற்றம் போதுமான தண்ணீரை நீங்கள் அருந்தி வந்தால் ஒரு நாளைக்கு நான்கு முதல் பத்து முறை வரை சிறுநீர் கழிப்பீர்கள். அவ்வாறு நீங்கள் குடிக்கும்போது உங்கள் சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்திலோ அல்லது ஏறக்குறைய நிறமற்ற நிலையிலும் இருக்க வேண்டும். நீங்கள் மிக குறைவாக சிறுநீர் கழிப்பதும் அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் இருப்பதும் உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு தேவையான அளவு நீரை நீங்கள் கொடுக்கவில்லை என்பதற்கான அறிகுறிகள் ஆகும்.

    சரும வறச்சி

    Signs Of Dehydration Summer Care Tips Tamil

    நீச்சத்து குறைந்தால் சரும செல்கள் உங்கள் சருமத்திற்கு பொலிவான தோற்றத்தை அளிக்காமல் சருமம் வறண்டு செதில்களாக உதிரக்கூடும். மேலும், மெல்லிய கோடுகள் மற்றும் சரும தளர்வு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். வியர்வை குறைந்து விடும். நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும்போது உங்கள் உடல் தன்னால் இயன்றவரை திரவங்களை உள்ளேயே தக்கவைத்துக் கொள்ள முயல்கிறது. இதனால் வியர்த்தல் குறைய வாய்ப்பு ஏற்படுகிறது. வியர்வை வெளியேற விட்டால் நாள் முழுவதும் உங்கள் சருமத்தில் படியும் அதிகப்படியான அழுக்கு மற்றும் எண்ணெய் பிசுக்கள் வெளியேற்ற உங்கள் சருமத்தால் இயலாது.

    மூட்டு வலி

    Signs Of Dehydration Summer Care Tips Tamil

    80 சதவீதம் நமது குருத்து எலும்பு நீரால் ஆனது. இந்த நீரானது உங்கள் எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசி கொள்வதை தடுத்து நடத்தல், குதித்தல் மற்றும் ஓடுதல் ஆகிய செயல்பாடுகளையும் உள்வாங்க உதவுகிறது. உங்கள் உடலில் நீரின் அளவு குறையும் போது உங்கள் மூட்டுகளில் நீர்ச்சத்து குறைந்து விடுகிறது. இதனால், அன்றாட வாழ்க்கை செயல்பாடுகளால் ஏற்படும் அதிர்வுகளின் தாக்கத்தை உங்கள் மூட்டுகளை பாதிக்க தொடங்குகிறது.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Constipation Dehydration Dehydration Signs Drinking Water Dry Skin Headache Health Tips Summer Health ஆரோக்கிய குறிப்புகள் கோடைக்கால உடல்நலம் தண்ணீர் குடித்தல் தலைவலி நீரிழப்பு நீர்ச்சத்து குறைபாடு அறிகுறிகள் மலச்சிக்கல் வறண்ட சருமம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இந்த 4 பருப்புகளுக்குள் இத்தனை ரகசிய நன்மைகளா?.. விபரம் உள்ளே..!

    June 13, 2026

    முதலிரவு அறையில் மல்லிகைப் பூ அலங்காரம்.. இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க..!

    June 12, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    உடல் எடை ஏறுகிறதா அல்லது குறைகிறதா?.. தைராய்டு கோளாறுகளால் ஏற்படும் ஆபத்துகள்..!

    June 9, 2026

    புகைப்பிடிக்காதவர்களையும் தாக்கும் வாய்ப்புற்றுநோய்.. இந்த மாற்றங்கள் சாதாரணமானவை அல்ல..!

    June 2, 2026

    சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் இயற்கை மருந்து.. கொழுப்பைக் கரைக்கும் சூப்பர் ஃபுட்..!

    June 1, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    பலிபீடத்தைத் தொட்டு வணங்கக் கூடாதா?.. உண்மையான ஆன்மீகத் தத்துவம்..!

    June 13, 2026
    Don't Miss

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    14.06.2026 ஞாயிற்றுக்கிழமை நாளுக்கான நல்ல நேரம், ராகு காலம், வைகாசி அமாவாசை திதி மற்றும் 12 ராசிகளுக்கான துல்லியமான ராசி பலன்கள்.

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    பலிபீடத்தைத் தொட்டு வணங்கக் கூடாதா?.. உண்மையான ஆன்மீகத் தத்துவம்..!

    June 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.