Close Menu
    What's Hot

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»“என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களே!” – விஜய் வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான பதிவு..!
    தமிழ்நாடு

    “என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களே!” – விஜய் வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான பதிவு..!

    Prime ReporterBy Prime ReporterApril 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Thalapathy Vijay Thanks TN People for Record 85 Percent Voter Turnout
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக அரசியல் வரலாற்றில் சிகரமான வரலாற்று நிகழ்வாக இந்த தேர்தல் அமைந்திருப்பதாக விஜய் பதிவிட்டுள்ளார்.

    தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் எக்ஸ் தள பதிவில்,

    என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும், வணக்கம். அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே. இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜாலக் கணக்குகள், சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.

    அரசியலைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்று இதுவரை அனுமானிக்கப்பட்ட இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேசத் தொடங்கிய அதிசயமும் அவசியமும் நிகழத் தொடங்கிவிட்டது.

    Thalapathy Vijay Thanks TN People for Record 85 Percent Voter Turnout

    இது எப்போது இருந்து தொடங்கியதென நடுநிலை மனம்கொண்டோர் அனைவரும் உணர்வர். இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவிகித வாக்குகள், வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தன. ஆனால், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வரலாற்று நிகழ்வாகப் பதிவாகி உள்ளது.

    85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று. வாக்குச்சாவடிகள் எங்கும் கோவில்களில் காணப்படும் கூட்டம்போல, குடும்பம் குடும்பமாகக் குழந்தை குட்டிகளுடன் வந்து வாக்களித்ததைக் கண்டு வியக்காதோர் எவரும் இருக்கவே வாய்ப்பில்லை. அது மட்டுமா?.

    வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வாக்களிப்பதற்காகவே பெரும்பொருள் செலவு செய்து வந்த ஜனநாயகர்களை இருகரம் கூப்பி வணங்காமல் இருக்க முடியுமா? தேர்தல் திருவிழா என்றும் ஜனநாயகத் திருவிழா என்றும் சொல்லப்படுவதன் அர்த்தம் சுகப்பட்டதே நேற்றுதான். இந்த 2026 ஏப்ரல் 23 தான். எனினும் இது ஒரு தொடக்கம் மட்டுமே.

    Thalapathy Vijay Thanks TN People for Record 85 Percent Voter Turnout

    தமிழகத் தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழ்நாட்டு மக்களாகிய, என் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், என் தாத்தா, அப்பா, அண்ணன், தம்பிகள், என் குடும்ப உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியறிதலைக் காணிக்கையாக்குகிறேன்.

    குறிப்பாக, நம் குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா நண்பீஸ்க்கு என்னுடைய – உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும். குறிப்பாக, நான் நன்றி செலுத்த வேண்டியது, நம் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் நம் கழகத் தோழர்களுக்கும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும்தான்.

    வென்று வா தலைவா.. சத்யராஜ் பேச்சுக்கு பதிலடியாக விஜய்க்கு சிபிராஜ் எழுதிய கடிதம்..!

    இவர்களுக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும்? எப்படித் தாக்குப் பிடிப்பார்கள் என்று ஏளனம் பேசியோருக்குச் செயல் மூலம் பதிலடி தந்த தோழர்களே…உங்களுக்கு என் மனம்நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும். கழகத் தோழர்களுக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் நன்றி. நம்பிக்கையோடு இருப்போம்.

    நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்

    என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும், வணக்கம்.

    அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே. இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜாலக்…

    — TVK Vijay (@TVKVijayHQ) April 24, 2026
    85 Percent Voting Tamil Nadu Assembly Election Thalapathy Vijay TN Election 2026 TVK Vijay Vijay Thanks Note தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் 2026 விஜய் அறிக்கை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026

    வெளிநாட்டில் இருந்து வந்து வாக்களித்தவர்களுக்கு.. வடிவேலு பாணியில் ஒரு எதார்த்தமான ‘தக் லைஃப்’ ..!

    April 24, 2026

    அழியாத ‘மை’ குறித்து கிளம்பிய சர்ச்சை.. பிக் பாஸ் ராஜு வைத்த அதிர்ச்சி குற்றச்சாட்டு..!

    April 24, 2026

    வென்று வா தலைவா.. சத்யராஜ் பேச்சுக்கு பதிலடியாக விஜய்க்கு சிபிராஜ் எழுதிய கடிதம்..!

    April 22, 2026

    குழந்தைகளை அரசியலில் இழுக்கலாமா?.. விஜய்யை விளாசிய ரங்கராஜ் பாண்டே..! (வீடியோ)

    April 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    கவின் 11வது படம் அறிவிப்பு – குடும்பக் கதையுடன் Beyond Pictures புதிய முயற்சி..!

    April 24, 2026

    முகத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க.. 5 சிறந்த ஃபேஸ் பேக்குகள்..!

    April 24, 2026

    ‘Flight of Fantasy 5.0’.. ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கிடைத்த முதல் விமானப் பயணம்..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026

    ஜனநாயகத்துடன் இயற்கை கடமை.. தேர்தல் திருவிழாவை பசுமையாக்கிய ஊராட்சி நிர்வாகம்..!

    April 24, 2026
    Don't Miss

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில், பாடகி கெனிஷா வெளியிட்டுள்ள புதிய சேலை புகைப்படங்கள் மற்றும் அதற்கு எழுந்துள்ள நெட்டிசன்களின் விமர்சனங்கள்.

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026

    சங்கீதா நோட்டமிடுவார்.. மீண்டும் ட்ரெண்டாகும் விஜயின் குடும்ப விவகாரம்..!

    April 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.