Close Menu
    What's Hot

    ஜூன் 21 :இன்று எந்தெந்த ராசிகளுக்குப் புதிய வருமான வாய்ப்புகள் தேடி வரும்?

    June 21, 2026

    5 ஆண்டுகளில் 70 வினாத்தாள் கசிவு.. அரசை வெளுத்து விட்ட ராகுல் காந்தி..!

    June 20, 2026

    15 நிமிடங்களில் முகம் தங்கம் போல ஜொலிக்கும்.. அஞ்சறைப் பெட்டி அழகு இரகசியங்கள்..!

    June 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆன்மிகம்»குழந்தை பாக்கியம் வேண்டுமா?தலையாட்டி கணபதியின் மகிமையும்.. வழிபாடு முறைகளும்..!
    ஆன்மிகம்

    குழந்தை பாக்கியம் வேண்டுமா?தலையாட்டி கணபதியின் மகிமையும்.. வழிபாடு முறைகளும்..!

    Prime ReporterBy Prime ReporterApril 22, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Worship Attur Thalaiyatti Vinayagar for marriage and children
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஒரு செயலை செய்யும் முன் முதல் கடவுளான விநாயகரை வணங்குவது நம் தமிழர் மரபு விநாயகரை வணங்கினால், வெற்றி உறுதி என்ற நம்பிக்கை பலரிடையே உள்ளது. தலையாட்டி விநாயகர் ஆலயம் ஆத்தூர் பகுதியில் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் பக்தர்களிடையே தனித்துவமான வரலாற்றையும், அதிசயத்தையும், பெறுகிறது.

    ஒரு காலத்தில் பல நதிகள் ஓடியதால் ‘ஆற்றூர்’ என அழைக்கப்பட்ட இவ்வூர் காலப்போக்கில் பெயர் மருவி ‘ஆத்தூர்’ ஆனதாக கூறப்படுகிறது. புராணக் கதைகளின் படி வசிஷ்ட முனிவர் இப்பகுதியில் தவம் செய்து பல இடங்களில் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்தாராம். அவரின் தவப்பலனை சிவபெருமான் ஜோதி வடிவில் வந்து அருள் காட்டியதாகவும் பின்னர் அந்த லிங்கம் மண்ணில் புதைந்ததாகவும் கூறப்படுகிறது.

    Worship Attur Thalaiyatti Vinayagar for marriage and children

    பல ஆண்டுகள் கழித்து சிவ பக்தரான ஒரு மன்னனின் கனவில் இறைவன் தோன்றி நான் இத்தளத்தில் புதைந்திருக்கிறேன். எனக்கு கோவில் எழுப்பு என கூறினாராம். மன்னனின் கனவில் தோன்றிய சிவலிங்கமும் புதையலும் கிடைத்ததாம். அந்த செல்வத்தை கொண்டு கோவில் கட்ட தொடங்கிய அந்த மன்னர், முதலில் விநாயகரிடம் அனுமதி பெற்று பணியை ஆரம்பித்தாராம்.

    Worship Attur Thalaiyatti Vinayagar for marriage and children

    கோவில் கட்டுமானம் வெற்றிகரமாக முடிந்தபின் நன்றாக கட்டியுள்ளேனா என்று மன்னன் கேட்டபோது விநாயகர் ‘ஆம்’ என்று தலையை ஆட்டி சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பக்தர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. காவல் கணபதி எனப் போற்றப்படும் இந்த தலையாட்டி விநாயகர் வேண்டிய காரியங்கள் வெற்றியடையும் வரை நம்முடன் இருந்து காப்பாற்றுவதாக நம்பப்படுகிறது.

    Worship Attur Thalaiyatti Vinayagar for marriage and children

    மனக் குழப்பமா?.. எதிர்மறை எண்ணங்களை விரட்டி புத்துணர்ச்சி அளிக்கும் ‘அதிசய மாலை’..!

    பக்தர்களின் உறுதியான நம்பிக்கை திருமண தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, கிரக தோஷங்கள் விலக, பலரும் இத்தளத்திற்கு வந்து விருப்பமான பூஜைகளை செய்து தலையாட்டி விநாயகரை தரிசித்து செல்கின்றனர். ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா இத்தளத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8:30 மணி வரை இங்கு தலையாட்டி விநாயகரை தரிசனம் செய்யலாம். ஆத்தூர் பேருந்து நிலையத்திற்கு அருகிலே அமைந்துள்ள இந்த ஆலயம் பக்தர்களை தலையாட்டி வரவேற்க காத்திருக்கிறது.

    வழிபாட்டு முறைகள் மற்றும் பலன்கள்

    திருமணத் தடை நீங்க

    திருமண வயதை எட்டியும் வரன் அமையாமல் தள்ளிப் போகும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள், இத்தலத்திற்கு வந்து விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி, மனதார வேண்டிக்கொண்டால் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

    குழந்தைப் பாக்கியம்

    நீண்ட நாட்களாகக் குழந்தை செல்வம் இல்லாத தம்பதிகள், சங்கடஹர சதுர்த்தி அல்லது சாதாரண நாட்களில் இங்கு வந்து விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்து வழிபடலாம்.

    வெற்றி உறுதி

    புதிய தொழில் தொடங்குபவர்கள் அல்லது ஒரு முக்கியமான காரியத்தைத் தொடங்குபவர்கள், இவரை ‘காவல் கணபதி’யாக நினைத்து வேண்டிக்கொண்டால், அந்தக் காரியம் முடியும் வரை அவர் துணையிருப்பார் என்று சொல்லப்படுகிறது.

    தோஷ நிவர்த்தி

    கிரக தோஷங்கள், குறிப்பாக ராகு-கேது தோஷங்கள் உள்ளவர்கள் இக்கோயிலில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது.

    குறிப்பு

    விநாயகர் சதுர்த்தி போன்ற விசேஷ நாட்களில் இக்கோயிலில் சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் வெகு விமர்சையாக நடைபெறும்.

    Attur Thalaiyatti Ganesha temple timings Attur Thalaiyatti Vinayagar Ganesha temple Attur Salem Lord Ganapati worship for marriage Marriage delay remedy Tamil Pooja for child birth Tamil Thalaiyatti Vinayagar history ஆத்தூர் தலையாட்டி விநாயகர் குழந்தை பாக்கியம் கிடைக்க பூஜை தலையாட்டி விநாயகர் வரலாறு திருமண தடை நீங்க வழிபாடு விநாயகர் கோயில் ஆத்தூர்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கடன் தொல்லையா?.. ஓட ஓட விரட்டும் ‘மேஜிக்’ பவளம்..!

    June 18, 2026

    முன்னோர்களின் படங்களை பூஜை அறையில் வைக்கலாமா?.. அமேசிங் வாஸ்து முறைகள்..!

    June 16, 2026

    ‘இந்த’ திசையில் துடைப்பத்தை வைக்காதீங்க.. கடுமையான பண நெருக்கடியை உண்டாக்கும்..!

    June 15, 2026

    பலிபீடத்தைத் தொட்டு வணங்கக் கூடாதா?.. உண்மையான ஆன்மீகத் தத்துவம்..!

    June 13, 2026

    பல்லி விழுந்தால் ஆபத்தா, நன்மையா?.. கௌரி சாஸ்திரம் சொல்லும் பலன்கள்..!

    June 9, 2026

    ஏழு தலைமுறை பாவங்களைப் போக்கும் தர்ப்பணம்.. பரிபூரண ஆசியைப் பெறும் ரகசியம்..!

    June 2, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அவசரத்திற்குப் பெஸ்ட் சாய்ஸ்.. வெறும் 10 நிமிடத்தில் அசத்தலான தக்காளி மிளகு சட்னி..!

    June 20, 2026

    தமிழக வரலாற்றில் முதல்முறை.. அமைச்சர்களின் போன் நம்பர், இமெயில் முகவரிகள் வெளியீடு..!

    June 20, 2026

    பூரி, சப்பாத்திக்கு சூப்பர் காம்பினேஷன்.. ஹோட்டல் சுவையில் ‘உருளைக்கிழங்கு குருமா’..!

    June 17, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026
    Don't Miss

    ஜூன் 21 :இன்று எந்தெந்த ராசிகளுக்குப் புதிய வருமான வாய்ப்புகள் தேடி வரும்?

    June 21, 2026

    ஆனி 7-ஆம் தேதிக்கான இன்றைய பஞ்சாங்கம்; 12 ராசிகளின் ஞாயிறு ராசிபலன் மற்றும் கும்ப ராசிக்கான சந்திராஷ்டம எச்சரிக்கை விவரங்கள்.

    5 ஆண்டுகளில் 70 வினாத்தாள் கசிவு.. அரசை வெளுத்து விட்ட ராகுல் காந்தி..!

    June 20, 2026

    15 நிமிடங்களில் முகம் தங்கம் போல ஜொலிக்கும்.. அஞ்சறைப் பெட்டி அழகு இரகசியங்கள்..!

    June 20, 2026

    முட்டை சாப்பிட மாட்டீங்களா? கவலை விடுங்க.. ஹெல்தி புரோட்டீன் டயட்..!

    June 20, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.