தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவடைய இருப்பதால் தற்போது சமூக வலைதளங்களில் தொண்டர்கள் ஹாஷ்டேக் செய்து வருகிறார்கள்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சொன்ன சொல் மாறாமல் கட்சியை தொடங்கி 233 தொகுதிகளில் வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளார். இந்த நிலையில், #WeTrustVIJAY ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
பொய் சொல்லி மக்களை ஏமாற்றும் திருட்டு திமுக!#WeTrustVIJAYpic.twitter.com/CQ8RyXdyNB
— RamKumarr (@ramk8060) April 21, 2026
விஜய்க்கு போட்டியாக #DMKWinningBig திமுக ஐடி விங்கும் ஜோராக ஆரம்பித்து இரண்டு கட்சிகளுக்கும் இடையே தான் போட்டி என்பதை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வைரல் ஆக்கி வருகின்றனர்.
#DMKWinningBig pic.twitter.com/MwDv4gpyHE
— காதர்பாட்சா முத்துராமலிங்கம் (@kvmuthuramaling) April 21, 2026
மக்களின் கடைசி நம்பிக்கை விஜய் தான் #WeTrustVIJAY என அவரது தொண்டர்கள் மற்றும் தமிழக வெற்றிக்கழக விருச்சுவல் வாரியார் ஏகப்பட்ட வீடியோக்களை எடிட் செய்து வெளியிட்டும், விஜயின் சென்னை பிரச்சார வீடியோக்களை வெளியிட்டும் வருகின்றனர்.

ரஜினி வீட்டு கதவைத் தட்டிய திமுக.. தேர்தல் நேரத்தில் நடந்த முக்கிய சந்திப்பு பின்னணி..!
தமிழ்நாடு அரசியலில் விஜய் ஒரு கேம் சேஞ்சராக மாறப் போகிறார் என்றும், திமுக அரசை வீழ்த்தி விஜய் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடுவார் எனவும், அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
The GAME CHANGER 🔥🔥🔥🔥🔥@TVKVijayHQ #WeTrustVIJAY pic.twitter.com/0pbiItYxRr
— Vijay Fans Trends (@VijayFansTrends) April 21, 2026

