Close Menu
    What's Hot

    வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா.. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் NTK வேட்பாளர்..!

    April 20, 2026

    ரூ. 5,000 டோக்கன்? தோல்வி பயமா? கரூரிலிருந்து இறக்கப்பட்ட அடியாட்கள்..!

    April 20, 2026

    பங்குச்சந்தையில் அதிரடி: டாப் 8 நிறுவனங்களின் மதிப்பு ₹1.87 லட்சம் கோடி உயர்வு! முழு விவரம்.

    April 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»நான் கேட்பது இதுதான்.. செய்வீர்களா? மக்களுக்கு இபிஎஸ் கோரிக்கை!
    தமிழ்நாடு

    நான் கேட்பது இதுதான்.. செய்வீர்களா? மக்களுக்கு இபிஎஸ் கோரிக்கை!

    Prime ReporterBy Prime ReporterMarch 23, 2026Updated:March 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    This is what I'm asking.. Will you do it..EPS request to the people!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நான் கேட்கப்போவது, உங்கள் பாதுகாப்பிற்கான உத்தரவாதம். இத்தனை ஆண்டுகள் உங்கள் மனதில் இருந்துகொண்டிருந்த அச்சத்தை உடைத்தெறிவதற்கான ஒரே வழி இதுதான் என எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்களுக்கு வணக்கம். கடந்த 5 ஆண்டுகளாக, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், திமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு சீர்கேடுகள் குறித்து நான் அறிக்கைகள், சமூக ஊடகங்கள், செய்தியாளர் சந்திப்புகள், சட்டமன்ற உரைகள் வாயிலாக தொடர்ந்து சுட்டிக்காட்டி, உரிய முறையில் ஆட்சியை நடத்த வலியுறுத்தி வந்துள்ளேன்.

    ஆனால், பொம்மை முதல்வராக இருந்த திரு.ஸ்டாலின், அவர் நடத்திய விடியா திமுக காட்டாட்சியோ, திருந்தியதாகவும் தெரியவில்லை; எதையும் திருத்தியதாகவும் தெரியவில்லை!

    எனவே தான் இம்முறை உங்களை நோக்கி இந்த பதிவினை வெளியிடுகிறேன். திருநெல்வேலி அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், கடந்த 6 நாட்களுக்கு முன்பு மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில், நேற்று காலை வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

    இந்நிலையில், நேற்றைய தினம் அந்த விவசாயியின் 23 வயது மகள் தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

    இதைத் தொடர்ந்து உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட, 3 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

    This is what I'm asking.. Will you do it..EPS request to the people!

    கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சி தமிழ்நாட்டை நிறுத்தியுள்ள இடம் இது தான்.

    இங்கே குற்றங்கள் தடுக்கப்படாது, குற்றவாளிகள் மீது நடவடிக்கை இருக்காது, அதுவும் குற்றவாளிகளுக்கு ஆளுங்கட்சி தொடர்பு இருந்தால் சொல்லவே வேண்டாம்!

    ஊருக்கே சமூகநீதி பாடமெடுக்கும் திமுக ஆட்சியில், பட்டியலின மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதற்கு வேங்கைவயல் முதல் நாங்குநேரி பெரும்பத்து வரை பல்வேறு எடுத்துக்காட்டுகள் உள்ள நிலையில், தற்போது இச்செய்தியும் சாட்சியாக உள்ளது!

    விளிம்புநிலை மக்களின் குரலாக தன்னைக் காட்டிக்கொள்ளும் திரு. திருமாவளவன் போன்றோர், இதைப் பற்றி ஏன் பேசவில்லை? ஏன் குரல் கொடுக்கவில்லை? தங்கள் சீட்டுகளுக்காக திமுக-விடம் பேசுபவர்கள், இதுபோன்ற உண்மையான மக்கள் பிரச்சனைகளையும் பேசலாமே? திருமாவளவன்.

    இது தான் திமுக-வின் கேடுகெட்ட ஆட்சி! இது தான் திமுக கூட்டணி கட்சிகளின் லட்சணம்!

    தேர்தல் விதிகள் அமலில் வந்துவிட்டதை உணர்ந்து, திமுக அரசு காவல்துறை போலவே செயல்படாமல், தமிழக காவல்துறைக்கு இருக்கும் நற்பெயரைக் காப்பாற்றும் வகையில் செயல்பட்டு, குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.

    மக்களே- இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு உங்களிடம் தான் இருக்கிறது! நான் கேட்கப்போவது,
    உங்கள் பாதுகாப்பிற்கான உத்தரவாதம். இத்தனை ஆண்டுகள் உங்கள் மனதில் இருந்துகொண்டிருந்த அச்சத்தை உடைத்தெறிவதற்கான ஒரே வழி.

    தமிழகம் வாழ வேண்டும் என்றால், திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Aiadmk CM Stalin DMK Edappadi Palaniswami Politics அஇஅதிமுக அரசியல் எடப்பாடி பழனிசாமி திமுக முதலமைச்சர் ஸ்டாலின்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இதுதான் கலாச்சாரமா?.. விஜய் – த்ரிஷா குறித்து எடப்பாடி பழனிசாமி சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    April 18, 2026

    தமிழக தேர்தல் களத்தை அதிரவைக்கும் த.வெ.க தலைவர் விஜய்யின் பகிரங்க மடல்

    April 18, 2026

    அதுக்கு சரிப்பட்டு வர மாட்டார்.. விஜய்யின் செயல்பாடுகளை விமர்சித்த பிரபலம்..!

    April 18, 2026

    அரசியல் களத்தில் திடீர் திருப்பம்: “ராகுல்காந்தியைச் சந்திக்க முதல்வருக்கு நேரமில்லை!” – ஆர்.எஸ்.பாரதி அதிரடிப் பேட்டி

    April 18, 2026

    மீண்டும் தள்ளிப்போகிறதா தொகுதி மறுவரையறை?.. வெடி வெடித்து கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்..!

    April 18, 2026

    களத்தில் இறங்கிய விஜய்.. வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்த ‘தளபதி’ ..! (வீடியோ)

    April 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பங்குச்சந்தையில் அதிரடி: டாப் 8 நிறுவனங்களின் மதிப்பு ₹1.87 லட்சம் கோடி உயர்வு! முழு விவரம்.

    April 20, 2026

    ரூ. 5,000 டோக்கன்? தோல்வி பயமா? கரூரிலிருந்து இறக்கப்பட்ட அடியாட்கள்..!

    April 20, 2026

    7000mAh பேட்டரியுடன் Realme 16 5G vs 108MP கேமராவுடன் Redmi Note 15 5G

    April 18, 2026

    கதறி அழும் நர்சிங் மாணவி.. காப்பகத்தில் நடப்பது என்ன?.. அதிர வைக்கும் பின்னணி..!

    April 18, 2026

    வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா.. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் NTK வேட்பாளர்..!

    April 20, 2026
    Don't Miss

    வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா.. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் NTK வேட்பாளர்..!

    April 20, 2026

    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என சூலூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜசேகரன், செஞ்சேரிமலை முருகன் முன்பு 100 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்திட்டு உறுதிமொழி.

    ரூ. 5,000 டோக்கன்? தோல்வி பயமா? கரூரிலிருந்து இறக்கப்பட்ட அடியாட்கள்..!

    April 20, 2026

    பங்குச்சந்தையில் அதிரடி: டாப் 8 நிறுவனங்களின் மதிப்பு ₹1.87 லட்சம் கோடி உயர்வு! முழு விவரம்.

    April 20, 2026

    ஏப்ரல் 20: வாரத் தொடக்கத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்..!

    April 20, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.