Close Menu
    What's Hot

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026

    சங்கீதா நோட்டமிடுவார்.. மீண்டும் ட்ரெண்டாகும் விஜயின் குடும்ப விவகாரம்..!

    April 24, 2026

    வெளிநாட்டில் இருந்து வந்து வாக்களித்தவர்களுக்கு.. வடிவேலு பாணியில் ஒரு எதார்த்தமான ‘தக் லைஃப்’ ..!

    April 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»திமுக ஆட்சியில் மக்களின் நிம்மதியே முடிந்துவிட்டது… மானாமதுரை சம்பவத்திற்கு இ.பி.எஸ் கண்டனம்!
    தமிழ்நாடு

    திமுக ஆட்சியில் மக்களின் நிம்மதியே முடிந்துவிட்டது… மானாமதுரை சம்பவத்திற்கு இ.பி.எஸ் கண்டனம்!

    Prime ReporterBy Prime ReporterMarch 5, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Why wasn't a single question asked in Tamil in the SI exam.. Is it a verbal policy.. EPS criticism!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதல்வர் என்ன செய்துக் கொண்டிருக்கிறார் தெரியுமா? “முடிந்துவிட்டது” என தான் காட்டிய சைகை வைரல் ஆனதாக வெட்டிப் பெருமை பேசிக் கொண்டிருக்கிறார் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் கிராமத்திற்குள், இருசக்கர வாகனங்களில் அரிவாள் மட்டும் பட்டாக்கத்திகளுடன் வந்த ஒன்பது மர்மநபர்கள், கண்ணால் கண்டவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    இதே மாதிரியான தாக்குதல் 2 நாட்களுக்கு முன்பு தான் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் நடந்துள்ளது. அதன் ரத்த ஈரம் காய்வதற்குள் அதேபோன்றதொரு தாக்குதல் மீண்டும் நடக்கிறது என்றால், இவை சொல்லவரும் செய்தி என்ன?

    சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதலமைச்சர், ஒரு கையாலாகாத வெறும் பொம்மை முதல்வராக இருக்கிறார் என்பது தானே? திமுக அரசின் “குற்றவாளிகள் கைது” நடவடிக்கையைக் கண்டு குற்றவாளிகள் யாரும் பயந்த மாதிரியே தெரியவில்லை!

    பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் புகுந்து தைரியமாக இப்படி ஒரு கொலைவெறித் தாக்குதல் நடக்கிறது என்றால், இங்கே நடக்கும் #சமூகஅநீதிதிமுகஅரசு இதையெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது என்று தானே மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?

    இப்படி மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதல்வர் என்ன செய்துக் கொண்டிருக்கிறார் தெரியுமா? “முடிந்துவிட்டது” என தான் காட்டிய சைகை வைரல் ஆனதாக வெட்டிப் பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்.

    ஆமாம் திரு. ஸ்டாலின், அவர்களே…. உங்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முடிந்துவிட்டது! பெண்கள் பாதுகாப்பு முடிந்துவிட்டது! சமூகநீதி முடிந்துவிட்டது! மொத்தத்தில், தமிழக மக்களின் நிம்மதியே முடிந்துவிட்டது!

    Will Tamil Nadu women trust election time money eps criticized CM Stalin

    இப்படி முடிந்துவிட்டதை எல்லாம் திரும்பப் பெற ஒரே வழி, உங்களுடைய விடியா ஆட்சிக்கு முடிவு கட்டுவதே! அதை மிக விரைவில் தமிழக மக்கள் “சிறப்பாக செய்ய” காத்திருக்கிறார்கள்!

    இடைக்காட்டூர் கிராமத்தில் அரங்கேறிய கொலைவெறித் தாக்குதலில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Aiadmk CM Stalin DMK Edappadi Palaniswami Politics எடப்பாடி பழனிசாமி திமுக அரசு முதலமைச்சர் ஸ்டாலின்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களே!” – விஜய் வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான பதிவு..!

    April 24, 2026

    வென்று வா தலைவா.. சத்யராஜ் பேச்சுக்கு பதிலடியாக விஜய்க்கு சிபிராஜ் எழுதிய கடிதம்..!

    April 22, 2026

    குழந்தைகளை அரசியலில் இழுக்கலாமா?.. விஜய்யை விளாசிய ரங்கராஜ் பாண்டே..! (வீடியோ)

    April 22, 2026

    எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த விஜய்.. ADMK கோட்டையில் TVK-வின் அதிரடி வியூகம்..!

    April 22, 2026

    ரத்தம் வந்தும் சிரித்த முகம்.. விஜய்க்கு ரசிகர்கள் கொடுத்த அடுத்தடுத்த அதிர்ச்சிகள்..!

    April 21, 2026

    #WeTrustVIJAY மற்றும் #DMKWinningBig.. களத்தை விட இணையத்தில் அனல் பறக்கும் பிரச்சாரம்..!

    April 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முகத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க.. 5 சிறந்த ஃபேஸ் பேக்குகள்..!

    April 24, 2026

    கவின் 11வது படம் அறிவிப்பு – குடும்பக் கதையுடன் Beyond Pictures புதிய முயற்சி..!

    April 24, 2026

    ‘Flight of Fantasy 5.0’.. ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கிடைத்த முதல் விமானப் பயணம்..!

    April 24, 2026

    ஜனநாயகத்துடன் இயற்கை கடமை.. தேர்தல் திருவிழாவை பசுமையாக்கிய ஊராட்சி நிர்வாகம்..!

    April 24, 2026

    வாக்குப்பெட்டிகளை எடுக்க தடை?.. காவலர் மற்றும் ஏஜென்ட் மீது தவெக-வினர் சரமாரி தாக்குதல்..!

    April 24, 2026
    Don't Miss

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026

    தேர்தலில் வாக்களிக்க வந்த திரிஷாவின் காரில் இருந்த ‘கிறிஸ்தவ மாலை’ – அவர் மதம் மாறிவிட்டாரா என சமூக வலைதளங்களில் கிளம்பியுள்ள புதிய விவாதம்.

    சங்கீதா நோட்டமிடுவார்.. மீண்டும் ட்ரெண்டாகும் விஜயின் குடும்ப விவகாரம்..!

    April 24, 2026

    வெளிநாட்டில் இருந்து வந்து வாக்களித்தவர்களுக்கு.. வடிவேலு பாணியில் ஒரு எதார்த்தமான ‘தக் லைஃப்’ ..!

    April 24, 2026

    “என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களே!” – விஜய் வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான பதிவு..!

    April 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.