Close Menu
    What's Hot

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»Breaking.. விடைபெற்றார் பொதுவுடைமை போராளி.. நல்லகண்ணு காலமானார்!
    தமிழ்நாடு

    Breaking.. விடைபெற்றார் பொதுவுடைமை போராளி.. நல்லகண்ணு காலமானார்!

    Prime ReporterBy Prime ReporterFebruary 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Communist fighter Nallakannu passes away
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்.

    101 வயதாகும் மூத்த தலைவர் நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    கடந்த 2 நாட்களாக கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

    செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்மதார். தென் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த நல்லகண்ணு சாதி கொடுமையை தீவிரமாக எதிர்த்து வந்தார்.

    இளம் வயதிலியே சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்று சிறைக்கு சென்று வந்தார். இயற்கை வளங்களை காக்க தொடர்ந்து போராடி வந்தவர். தாமிரபரணி உள்ளிட்ட பல்வேறு நதிகளை காக்க போராடினார்.

    பொதுவாழ்வில் நேர்மை, தொண்டு , தியாகம், எளிமையின் அடையளமாக திகழ்ந்த நல்லகண்ணு 1925 டிசம்பர் 6ஆம் தேதி பிறந்தார். பள்ளிப் பருவத்தில் காந்தியவாதியாக இருந்த அவர் கம்யூனிஸ்ட்வாதியாக மாறினார்.

    Communist fighter Nallakannu passes away

    18வது வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். முழு நேரமாக தன்னை பொது வாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொண்டவர், உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற போராட்டத்தில் ஈடுபட்டு 7 ஆண்டு சிறை சென்றார்.

    பணம், பதவிகளை விரும்பாத நல்லகண்ணு அரசியலில் தூய்மையாளராக இருந்தார். தமிழக அரசு தந்த ரூ.1 லட்சம் கட்சிக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் கொடுத்தார். கட்சி கொடுத்த ரூ.1 கோடியை கட்சிக்கே திருப்பி அளித்தார். 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தகைசால் விருதை வழங்கி கவுரவித்தது.

    நல்லகண்ணு உடல்நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிதீவிர சிகிச்சையில் இருந்த போதும் உறுப்புகள் செயலிழந்ததால் காப்பாற்ற முடியவில்லை என்றும், நல்லகண்ணு குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்.

    1.55க்கு அவர் இயற்கை எய்தினார், பல்துறை மருத்துவக்குழு தீவிர சிகிச்சையும், அதி தீவிர கண்காணிப்பையும் வைத்திருந்தனர். இன்று காலை முதல் நல்லகண்ணு உடல், மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைந்தது என மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Nalla kannu Nallakannu Passes Away Politics நல்லகண்ணு நல்லகண்ணு காலமானார்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    90 அடி அருவி, கிழிந்த தசைநார்.. உயிரை கொடுத்து நடிச்சிருக்கேன் ராஷ்மிகா எமோஷனல்..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Don't Miss

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையம் வந்த இரண்டு பயணிகள் உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து வந்த 2.47 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.