Close Menu
    What's Hot

    பிஞ்சு மனதில் ஓட்டு அரசியல்?.. மகனின் பிடிவாதத்தால் தந்தை அதிர்ச்சி; விஜய் மீது புகார்..!

    April 25, 2026

    உஷார்..! வீடியோ காலில் ஆபாசமாக பேசி மாணவரை மிரட்டி ₹20,000 பறித்த கும்பல்..!

    April 25, 2026

    தடபுடல் பிரியாணி விருந்து.. தேர்தல் பணியில் இருந்தவர்களுக்கு திமுக உபசரிப்பு?..

    April 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»AI தொழில்நுட்பத்தில் இயங்கிய நாய்; பிளாஸ்டிக் ரோபோ.. கோவை மாணவர்கள் அசத்தல்..!
    கோவை

    AI தொழில்நுட்பத்தில் இயங்கிய நாய்; பிளாஸ்டிக் ரோபோ.. கோவை மாணவர்கள் அசத்தல்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 21, 2026Updated:February 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    robo UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவையில் பள்ளியில் பிரம்மாண்ட ‘மெகா ரோபோ ஃபெஸ்ட் 2026’-ல் ரோபோட்டிக்கு நாயை வடிவமைத்த மாணவர்கள், பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு உருவாக்கிய ரோபோவின் அசத்தல் செயல்பாடுகளை செய்து காட்டினர்.

    கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் ஆர்.வி.எஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், மெகா ரோபோ ஃபெஸ்ட் 2026″ (MEGA ROBO FEST 2026) என்னும் இரண்டு நாள் தொழில்நுட்பத் நிகழ்வு நடைபெற்றது.

    robo UTV

    பள்ளி வளாகத்தில் உள்ள கலாம் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, ஆர்.வி.எஸ் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் செந்தில் கணேஷ் மற்றும் தாளாளர் ஸ்ரீவித்யா லட்சுமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பாட்னா ஆர்யபட்டா அறிவுசார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும், தேசிய மருத்துவ ஆணையத்தின் உறுப்பினருமான பேராசிரியர் ஷரத் குமார் யாதவ் கலந்துகொண்டு மாணவர்களின் அறிவியல் படைப்பை தொடங்கி வைத்து பாராட்டினார்.

    பின்னர், மாணவர்களிடையே பேசுகையில், நவீன தொழில்நுட்ப உலகில் ரோபோட்டிக்ஸின் அவசியம் குறித்தும், மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் வருங்காலத்திற்கு இட்டுச் செல்லும், தற்போது மத்திய அரசு இதற்காக எண்ணற்ற திட்டங்களை கொண்டு வருகிறது.

    அந்தத் திட்டங்களுக்கு வரை வடிவம் கொடுக்க அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்களை தேடி அவர்களை ஊக்கப்படுத்தும் வேலைகளை மத்திய அமைச்சகம் செய்து வருகிறது. அதற்கான மாநாடு நடைபெற்று அதற்கான திட்ட அறிக்கைகளையும் எங்களை போன்றவர்களிடம் பெறப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    ஆர்.வி.எஸ் கல்வி நிறுவனங்களின் செயலாளர் பேராசிரியர் சாரம்மா சாமுவேல் மற்றும் சூலூர் ஆர்.வி.எஸ் பள்ளி முதல்வர் அமுதா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், மாணவர்களின் பல்வேறு புதுமையான ரோபோட்டிக் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.

    அதிலும், குறிப்பாக மாணவர்கள் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடமாடும் நாய், மற்றும் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ரோபோட் சென்சார் மூலம் இயங்கும் குப்பை அள்ளும் இயந்திரம், ஒரு பொருளைக் காட்டினால் அந்தப் பொருள் எங்கிருந்து வந்தது.

    அதன் வரலாறு குறித்து அந்த பொருளைப் பார்த்தவுடன் சொல்லும் துல்லியமான ரோபோட்டிக் AI ஆகியவற்றை மாணவர்கள் காட்சிப்படுத்தியிருந்தனர். இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த தொழில்நுட்பத் திருவிழாவில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    பின்னர் இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ஷரத் குமார் யாதவ், நேற்று முன்தினம் நடைபெற்ற AI ரோபோட்டிக் மாநாட்டில் AI தொழில்நுட்பம் குறித்த திட்டம் சார்ந்த அறிக்கையை பிரதமர் மோடியிடம் கொடுத்துள்ளதாகவும், வருங்காலத்தில் AI மற்றும் தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.

    AI Robotic Dog AI Technology India Artificial Intelligence Technology Coimbatore Tech News Robotics Innovation கோவை ரோபோ நாய் பிளாஸ்டிக் ரோபோ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பிஞ்சு மனதில் ஓட்டு அரசியல்?.. மகனின் பிடிவாதத்தால் தந்தை அதிர்ச்சி; விஜய் மீது புகார்..!

    April 25, 2026

    உஷார்..! வீடியோ காலில் ஆபாசமாக பேசி மாணவரை மிரட்டி ₹20,000 பறித்த கும்பல்..!

    April 25, 2026

    தடபுடல் பிரியாணி விருந்து.. தேர்தல் பணியில் இருந்தவர்களுக்கு திமுக உபசரிப்பு?..

    April 25, 2026

    வான்வழித் தாக்குதல் இல்லை.. இது பாதுகாப்பு ஒத்திகை.. இந்திய விமானப்படையின் அதிரடி ஒத்திகை..!

    April 25, 2026

    ‘பாகுபலி’ யானைக்கு நேர்ந்த கொடுமை.. வனப்பகுதியில் நடந்த பரபரப்பு சம்பவம்..!

    April 25, 2026

    நோட்டமிட்டு கல் வீச்சு.. கார் கண்ணாடியை உடைத்து தப்பியோடிய நபர்..!

    April 25, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திருமணம் நின்றது ஏன்?.. இப்படியா நடக்கணும்.. மவுனம் கலைத்த நடிகை ரித்விகா..!

    April 25, 2026

    தாய்லாந்தில் லூட்டி.. விஜய்சேதுபதியின் ரீல் மகளால் திணறும் சோசியல் மீடியா..! (Video)

    April 25, 2026

    இன்னும் குறையாத மவுசு.. யூடியூப்பை அதிரவைத்த கென் கருணாஸ்.. !

    April 25, 2026

    சூர்யா ரசிகர்களுக்கு செம ட்ரீட்.. ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா தேதி இதோ..!

    April 25, 2026

    ‘ஜன நாயகன்’ பட கசிவு.. கவனக்குறைவாக இருந்த எடிட்டர் சஸ்பெண்ட்..!

    April 25, 2026
    Don't Miss

    பிஞ்சு மனதில் ஓட்டு அரசியல்?.. மகனின் பிடிவாதத்தால் தந்தை அதிர்ச்சி; விஜய் மீது புகார்..!

    April 25, 2026

    தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தூண்டியதாக தவெக தலைவர் விஜய் மீது விசிக நிர்வாகி கோவை மாநகர காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

    உஷார்..! வீடியோ காலில் ஆபாசமாக பேசி மாணவரை மிரட்டி ₹20,000 பறித்த கும்பல்..!

    April 25, 2026

    தடபுடல் பிரியாணி விருந்து.. தேர்தல் பணியில் இருந்தவர்களுக்கு திமுக உபசரிப்பு?..

    April 25, 2026

    வான்வழித் தாக்குதல் இல்லை.. இது பாதுகாப்பு ஒத்திகை.. இந்திய விமானப்படையின் அதிரடி ஒத்திகை..!

    April 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.