எம்.ஆர்.ராதாவின் மகளான ராதிகா, பாரதிராஜா இயக்கத்தில் ‘கிழக்கே போகும் ரயில்’ படம் மூலம் அறிமுகமாகி 80-களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். ரஜினி, விஜயகாந்த் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் நடித்த அவர், பின்னர் ‘கிழக்கு சீமையிலே’, ‘ஜீன்ஸ்’ போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், ‘சித்தி’ போன்ற சின்னத்திரை தொடர்கள் மூலமாகவும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்தார். கடைசியாக அவர் ‘தாய் கிழவி’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஆகிய படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளே வேண்டாம்னு சொன்னேன்.. இயக்குநர் ராஜகுமாரன் ஓபன் டாக்..!
இந்நிலையில் நடிகை அமலா ராதிகா குறித்துப் பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அதில், “நான் ஏவிஎம் ஸ்டூடியோவில் மேக்கப் செய்துகொண்டிருந்தபோது என்னிடம் வந்த ராதிகா, மேக்கப் எப்படி போட வேண்டும் என்று சொல்லிக்கொடுத்ததோடு, உன் முக அழகை எப்படிக் காப்பாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்” என அமலா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

