கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவுக்கு திடீரென கடுமையான மூச்சுத்திணறல் (Breathlessness) ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த்கேர் (MGM Healthcare) தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட வி.எஸ். பாபு, அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் தமிழக அரசியல் களத்தில் பெரும் கவனம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போலி பிம்பம் உடைந்ததில் பதற்றமா?.. மு.க.ஸ்டாலினுக்கு தவெக அதிரடி கேள்வி..!
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரிலும் அவர் கலந்துகொண்டிருந்த நிலையில், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

