நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலான ‘அலா போலெலோ’ (Alo Bolelo) சமீபத்தில் வெளியானது. முதல் பாகத்தில் ‘காவாலா’ பாடலுக்குத் தமன்னா ஆடியதைப் போல, இதில் ஷாம்னா நடனமாடியுள்ளார்.
காமன்வெல்த் வெள்ளிப் பதக்க வீரரை நேரில் பாராட்டிய நடிகை சிம்ரன்..!
அனிருத் இசையில் வெளியான இந்தப் பாடல் மற்றும் ஷாம்னாவின் நடனம் குறித்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ரஜினிகாந்துடன் இணைந்து நடித்தது குறித்துப் பேசிய ஷாம்னா, “அவருடன் ஒரே ஷூட்டிங் ஸ்பாட்டில் நின்றது கனவு போன்ற அனுபவம். முதல் ஷாட் முடிந்தவுடன் என்னிடம் வந்து, ‘உனக்கு கண்கள் ரொம்ப பவர்ஃபுலாக இருக்கின்றன’ என்று ரஜினி சார் பாராட்டினார். அந்த வார்த்தைகள் எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுத்தது” என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

