எதிர்க்கட்சியினரின் தொடர் கோரிக்கைகள் மற்றும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில், முந்தைய ஆட்சிக் காலத்தின் ஊழல் கோப்புகள் மற்றும் தணிக்கை அறிக்கைகள் உரிய காலத்தில் முதலமைச்சரால் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உறுதியளித்துள்ளார்.
குறிப்பாக பேசுகையில், தமிழக சட்டப்பேரவையில் விவாதிக்கப்படும் அனைத்து விவகாரங்களும், மக்களின் கேள்விகளுக்கு அளிக்கப்படும் பதில்களும் வெளிப்படைத்தன்மையுடன் பொதுமக்களுக்கு நேரலை மூலம் முழுமையாகச் சென்று சேர்ந்து கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் தேவையில்லை.. உதயநிதி ஸ்டாலின் திட்டவட்ட அறிவிப்பு..!
அதேபோன்று, ஊழல் தொடர்பான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கும் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திசைதிருப்ப முயல்வதாகவும், உரிய நேரத்தில் முழுமையான ஆவணங்கள் வெளியிடப்படும் போது அதற்கான உண்மைகள் வெளிப்படும் என்றும் அரசு தரப்பு அமைச்சர்கள் சட்டப்பேரவையில் தெரிவித்தனர்.

