நடிகர் விஜய்யின் இறுதிப் படமான ‘ஜன நாயகன்’ படத்தின் 7-வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ (Jana Nayagan) திரைப்படம் திரையிடப்பட்ட வெறும் 7 நாட்களுக்குள் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.
வயிற்று வலியால் வடமாநிலத் தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்.. வீடு திரும்பாததால் அதிர்ச்சி..!
தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் கடைசிப் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு வரலாறு காணாத எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், முதல் வாரத்திலேயே உலகம் முழுவதும் மற்றும் தமிழகத்தில் வசூல் வேட்டையாடி வருகிறது. தமிழ் சினிமா வரலாற்றில் மிகக் குறைந்த நாட்களில் தமிழகத்தில் 100 கோடி கிளப்பில் இணைந்த படங்களில் ஒன்றாக இப்படம் இடம்பிடித்துள்ளது.

