மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்திற்கு மத்திய அமைச்சரின் பதில் அளித்துள்ளார். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தக் கோரி, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்திற்குப் பதிலளித்துள்ள மத்திய நீர் வளத்துறை அமைச்சர், தமிழகத்தின் நலன்களைப் பாதிக்கக்கூடிய வகையில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் மற்றும் நிலைப்பாடு தமிழக மக்களிடையே பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மத்திய நீர் வளத்துறை அமைச்சகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் தமிழகத்தின் நலன்களுக்கு எதிராகவும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு முரணாகவும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, மேகதாது அணை திட்டத்திற்குத் தடையை நீடிக்க வேண்டும் எனத் தமிழகத்தின் சார்பில் தொடர்ந்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
44 வயதில்தான் உண்மையான வாழ்க்கை தொடக்கம்.. நடிகை த்ரிஷாவின் வைரல் ஸ்டோரி..!
குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரமே காவிரியை நம்பியுள்ள நிலையில், மத்திய அமைச்சரின் இந்த ஏமாற்றம் தரும் பதில் தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

