நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் இந்தப் போராட்டம் மத்திய அரசின் நேரடியான தோல்வியைக் காட்டுவதாக இயக்குநர் வெற்றிமாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
‘Fair NEET’ (நியாயமான நீட்) என்ற முழக்கம் மாறி, அது முழுமையான ‘Ban NEET’ (நீட்டைத் தடை செய்) என்ற கோரிக்கையாக மாற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
போடுறா வெடிய… ‘ஜனநாயகன்’ படத்தின் லேட்டஸ்ட் கலெக்ஷன் ரிப்போர்ட்..!
நீட் தேர்வு முறையின் மூலம் ஒடுக்கப்பட்ட மற்றும் எளிய மாணவர்களின் மருத்துவக் கல்வி உரிமையும், அவர்களின் மருத்துவ அறிவும் பறிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். சென்னையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் வெற்றிமாறனுடன் இயக்குநர் பா.ரஞ்சித், அமீர் மற்றும் நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்ட பல முன்னணித் திரைத்துறையினரும் கலந்துகொண்டு மாணவர்களுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

