இந்தியாவில் சில கோயில்களில் மரபு மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் ஆண்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது அல்லது குறிப்பிட்ட நாட்களில் பெண்கள் மட்டுமே வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இது ‘பெண்களின் சபரிமலை’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு நடைபெறும் ‘ஆட்டுக்கால் பொங்கல்’ விழாவின்போது, லட்சக்கணக்கான பெண்கள் ஒன்றுகூடி வழிபாடு செய்கின்றனர். இந்தத் திருவிழாக் காலத்தில் ஆலய வளாகத்திற்குள் ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கேரளாவின் புகழ்பெற்ற சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் வழிபாடு செய்வதால் கடன் பிரச்சனை, திருமணத் தடை நீங்கும் என்பதும், குடும்பம் செழிக்கும் என்பதும் நம்பிக்கை
இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். இந்த அம்மன் மாதவிடாய் சுழற்சியைக் கொண்டாடும் தலம் என்பதால், தேவியின் மாதவிடாய் காலங்களில் ஆண்கள் இக்கோயிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது. அந்த நாட்களில் பெண் பூசாரிகள் அல்லது சன்யாசிகள் மட்டுமே வழிபாடுகளைச் செய்கின்றனர். இங்கு டிசம்பர் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் ‘நாரி பூஜை’ விழாவின்போது, பெண்கள் மட்டுமே கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். அந்நாளில் ஆண்கள் வளாகத்திற்குள் நுழையத் தடை உண்டு.
கடலூர் செல்பவர்கள் தவறவிடக்கூடாத இடம்.. வேண்டிய வரம் தரும் திருச்சோபுரநாதர் கோயில்..!
இங்குள்ள கருவறைக்குள் சன்யாசிகள் அல்லது புரோகிதர்கள் நுழைய அனுமதி இல்லை. கன்னி பகவதி துர்கையை, பெண்கள் மட்டுமே கருவறைக்கு அருகில் சென்று வழிபடுகின்றனர். இது உலகின் மிக அரிதான பிரம்மா கோயில்களில் ஒன்றாகும். இக்கோயிலின் கருவறைக்குள் திருமணமான ஆண்கள் நுழைவதற்கு ஒரு புராணச் சாபத்தின் காரணமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தொன்மையான மரபுகள், புராண நம்பிக்கைகள் மற்றும் அந்தந்தக் கோயில்களில் பின்பற்றப்படும் ஆகம விதிகளுடன் தொடர்புடையவை.

