தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்திருப்பது குடும்பத் தலைவிகள் மற்றும் நுகர்வோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளை முதல் தனியார் பால் பாக்கெட் லிட்டருக்கு ரூ. 4 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பால் கொள்முதல் விலை அதிகரிப்பு, போக்குவரத்துச் செலவுகள் மற்றும் பிற உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிட்டதாகத் தனியார் பால் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காய்கறி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள சாமானிய மக்கள், தற்போது பாலின் விலையும் உயர்ந்துள்ளது குடும்ப பட்ஜெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கவலை தெரிவித்துள்ளனர்.
வாடகை பாக்கி விவகாரம்.. கட்சி அலுவலகம் உட்பட 10 கடைகள் சீல்..!
இந்தத் தனியார் பால் விலை உயர்வினால், நுகர்வோர் ஆவின் பாலை நோக்கி அதிக அளவில் திரும்ப வாய்ப்புள்ளது. இருப்பினும், ஆவின் பால் விநியோகத்தில் போதுமான அளவு இருப்பு இருக்குமா என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. அத்தியாவசியத் தேவையான பால் விலையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது.
நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் அன்றாடச் செலவினங்களில் மாற்றத்தை உண்டாக்கும். இது குறித்து அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா அல்லது தனியார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

