Close Menu
    What's Hot

    முதல்வராக்க திட்டமிட்ட அதிமுக-திமுக?.. திருமாவளவன் விளக்கம்..!

    May 12, 2026

    மக்கள் நலனே முக்கியம்.. விசிக அலுவலகத்தில் முதல்வர் விஜய்..!

    May 12, 2026

    மரியாதை நிமித்தமான சந்திப்பா? அரசியல் கணக்கா?.. அதிமுக கோட்டையில் முதல்வர் விஜய்..!

    May 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»மது மனிதனை மிருகமாக்குகிறது.. புதிய அரசுக்கு முன்வைக்கப்படும் முக்கிய கோரிக்கை..!
    தமிழ்நாடு

    மது மனிதனை மிருகமாக்குகிறது.. புதிய அரசுக்கு முன்வைக்கப்படும் முக்கிய கோரிக்கை..!

    Prime ReporterBy Prime ReporterMay 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    salem-student-murder-drunk-classmates-video-drug-eradication-demand
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:

    மதுபோதையில் சக மாணவனை படுகொலை செய்து காணொலியில் படம் பிடித்த சிறுவர்கள்:

    கஞ்சா, மது போதையை ஒழிக்க போர்க்கால நடவடிக்கை தேவை! சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை அடுத்த காட்டுவளவு என்ற இடத்தில் மது போதையில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரு மாணவர்கள் உள்ளிட்ட மூவர் ஒன்று சேர்ந்து கோகுல் என்ற சக மாணவரை சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மாணவன் கோகுலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மாணவன் கோகுல், அவருடன் பயிலும் மாணவர்கள் இருவர் உள்ளிட்ட மூவரும் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்த போது, சாதியின் பெயரை சொல்லி திட்டியதால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் மாணவன் கோகுலை மற்ற மூவரும் சேர்ந்து கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, கொலை செய்யும் காட்சிகளை காணொலியாக பதிவு செய்து கொண்டாடியுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மூவரையும் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

    மது மனிதர்களை எந்த அளவுக்கு மிருகமாக்குகிறது என்பதற்கு மிக மோசமான எடுத்துக் காட்டு இது தான் . தங்களுடன் ஒன்றாக பழகிய நண்பனை கொலை செய்தது மட்டுமின்றி, அதை காணொலியில் பதிவு செய்து கொண்டாடும் அளவுக்கு மது மனிதனை கொடூரனாக மாற்றியிருக்கிறது. மதுவை விட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் மனிதர்களை மேலும் மோசமாக்குகின்றன. தமிழ்நாட்டில் மதுவும், பிற போதைப் பொருள்களும் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதைத் தான் இந்த நிகழ்வு உணர்த்துகிறது.

    தமிழ்நாட்டில் மது மற்றும் போதையின் சீரழிவுகள் ஏற்கனவே உச்சத்தை அடைந்து விட்டன. நிலைமை மேலும் மோசமாவதைத் தடுக்க தமிழ்நாட்டில் மது மற்றும் போதையை முற்றிலுமாக ஒழிக்க போர்க்கால அடிப்படையில் புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    Drug Abuse Tamil Nadu Drunk Classmates Violence Eradicate Ganja and Liquor Salem Crime News Salem Student Murder School Students Conflict TN Government Action கஞ்சா ஒழிப்பு கோரிக்கை சீலநாயக்கன்பட்டி சம்பவம் சேலம் மாணவன் படுகொலை பள்ளி மாணவர்கள் மோதல் புதிய அரசுக்கு கோரிக்கை போதைப்பொருள் இல்லாத தமிழகம் மது போதை கொலை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    முதல்வராக்க திட்டமிட்ட அதிமுக-திமுக?.. திருமாவளவன் விளக்கம்..!

    May 12, 2026

    மக்கள் நலனே முக்கியம்.. விசிக அலுவலகத்தில் முதல்வர் விஜய்..!

    May 12, 2026

    மரியாதை நிமித்தமான சந்திப்பா? அரசியல் கணக்கா?.. அதிமுக கோட்டையில் முதல்வர் விஜய்..!

    May 12, 2026

    சத்யமூர்த்தி பவனில் விஜய்.. காங்கிரஸ் அலுவலகத்தில் உற்சாக வரவேற்பு..!

    May 12, 2026

    இனிமேல் ₹10 எக்ஸ்ட்ரா கொடுக்க வேண்டாம்.. அமலுக்கு வந்த புதிய உத்தரவு..!

    May 12, 2026

    TVK-வில் களையெடுப்பு?.. மக்களுக்குத் தொந்தரவு கொடுத்தால் பதவி பறிபோகும்..!

    May 12, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    TVK-வில் களையெடுப்பு?.. மக்களுக்குத் தொந்தரவு கொடுத்தால் பதவி பறிபோகும்..!

    May 12, 2026

    இனிமேல் ₹10 எக்ஸ்ட்ரா கொடுக்க வேண்டாம்.. அமலுக்கு வந்த புதிய உத்தரவு..!

    May 12, 2026

    விமர்சனங்களை வரவேற்போம்.. சபையில் அரங்கேறிய சுவாரஸ்யமான உரையாடல்..!

    May 12, 2026

    சட்டமன்றத்தில் திமுக – தவெக மோதல்?நிர்வாகத்தில் திமுக தான் சீனியர்..!

    May 12, 2026

    நேரில் வந்த முதல்வர் விஜய்.. ஆசி வழங்கிய IUML காதர் மொகிதீன்..!

    May 12, 2026
    Don't Miss

    முதல்வராக்க திட்டமிட்ட அதிமுக-திமுக?.. திருமாவளவன் விளக்கம்..!

    May 12, 2026

    “என்னை முதலமைச்சராக்க முயற்சி நடப்பதாக நண்பர்கள் பேசியதையே நான் குறிப்பிட்டேன்; திமுக அல்லது அதிமுக தரப்பில் இருந்து யாரும் என்னை அணுகவில்லை” என விசிக தலைவர் திருமாவளவன் வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

    மக்கள் நலனே முக்கியம்.. விசிக அலுவலகத்தில் முதல்வர் விஜய்..!

    May 12, 2026

    மரியாதை நிமித்தமான சந்திப்பா? அரசியல் கணக்கா?.. அதிமுக கோட்டையில் முதல்வர் விஜய்..!

    May 12, 2026

    சத்யமூர்த்தி பவனில் விஜய்.. காங்கிரஸ் அலுவலகத்தில் உற்சாக வரவேற்பு..!

    May 12, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.