Close Menu
    What's Hot

    மூட் அவுட்டில் திரிஷா.. ஓ இதான் விஷயமா..!

    June 29, 2026

    குழந்தைகளுக்குத் ‘தாய்மாமன் சீர்’.. மோதிரம் வழங்கிய அமைச்சர்..!

    June 29, 2026

    ஜூன் 29: இன்று மாலை வரை இந்த தவறுகளை செஞ்சிடாதீங்க… இன்றைய 12 ராசி பலன்கள்!

    June 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»இந்தியா»தேர்தல் நேரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர்… குறுக்கு வழியில் பாஜக.. ஜோதிமணி கண்டனம்!
    இந்தியா

    தேர்தல் நேரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர்… குறுக்கு வழியில் பாஜக.. ஜோதிமணி கண்டனம்!

    Prime ReporterBy Prime ReporterApril 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Parliament session during election time... BJP at a crossroads.. Jyothimani condemns!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தேர்தல் நேரத்தில் கூட்டப்பட்டிருக்கிற நாடாளுமன்றக் கூட்டத்தொடரை மோடி அரசு ரத்து செய்ய வேண்டும் என கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், நாடாளுமன்றக் கூட்டத்தொடரை வரும் ஏப்ரல் 16 ,17 தேதிகளில் மோடி அரசு கூட்டியிருக்கிறது. தமிழ்நாடு,மேற்கு வங்கம் ஆகிய இரண்டு முக்கியமான மாநிலங்களில், குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில் இறுதிக்கட்ட பிரச்ச்சாரம் மிகத்தீவிரமாக நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் எதற்காக நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இவ்வளவு அவசரமாகக் கூட்ட வேண்டிய அவசியம் என்ன? ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு நாடாளுமன்றத்தைக் கூட்டமுடியாதா?

    நேர் வழியில் மக்களைச் சந்தித்து அவர்களின் ஆதரவைப் பெற்று தேர்தலில் வெல்ல முடியாத பாஜக இதுபோல் குறுக்கு வழியில் பிரச்சாரத்தை முடக்க வேண்டும் என்று நினைப்பதும்,அதற்காக மதிப்பு மிகுந்த நாடளுமன்றத்தைப் பயன்படுத்த நினைப்பதும் அவமானகரமானது.

    40 அடி தொட்டியில் விழுந்து உயிரிழந்த மாநகராட்சி பணியாளர்கள்.. திமுக தான் காரணம்.. சொல்கிறார் வானதி!

    மகளிர் இடஒதுக்கீடு மசோவை நாங்கள் வரவேற்கிறோம். 30 ஆண்டுகளுக்கு முன்பே உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தி வரலாறு படைத்த கட்சி காங்கிரஸ் கட்சி.ஆனால் மகளிர் இட ஒதுக்கீட்டின் பெயரால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் நாடாளுமன்றத் தொகுதிகளைக் குறைந்த அளவில் அதிகரித்து , உத்திரப்பிரதேசம் போன்ற வடமாநிலங்களின் நாடளுமன்றத் தொகுதிகளை மிக அதிக அளவில் அதிகரிப்பதை நாங்கள் ஏற்க முடியாது.

    Parliament session during election time... BJP at a crossroads.. Jyothimani condemns!

    தென் மாநிலங்களில் வெற்றிபெறாமலே ஒரு கட்சி, ஒன்றிய அரசில் ஆட்சி அமைக்க முடியும். இதனால் அதிக அளவில் வரிகட்டுகிற தென்மாநிலங்களுக்கு முக்கியமான பிரச்சினைகளில் முடிவெடுக்கிற அதிகாரம் இல்லாமல் போகும். ஆகவே இதுகுறித்து முதலில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விரிவாக விவாதிக்க வேண்டும். அதில் ஒத்தகருத்து ஏற்பட்டால மட்டுமே நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும்.

    உடனடியாக தேர்தல் நேரத்தில் கூட்டப்பட்டிருக்கிற நாடாளுமன்றக் கூட்டத்தொடரை மோடி அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    BJP Congress Jothimani MP Narendra Modi Parliament Session கரூர் எம்பி ஜோதிமணி காங்கிரஸ் பாஜக
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மீண்டும் ஆள்மாறாட்டம்.. MBBS மாணவர்கள் உட்பட 30 பேர் அதிரடி கைது..!

    June 22, 2026

    உங்களோடு என்றும் துணை நிற்பேன்.. முதல்வர் விஜய்க்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து..!

    June 22, 2026

    5 ஆண்டுகளில் 70 வினாத்தாள் கசிவு.. அரசை வெளுத்து விட்ட ராகுல் காந்தி..!

    June 20, 2026

    நேருவை யாருடனும் ஒப்பிட முடியாது.. சரத் பவார் சாடல்..!

    June 10, 2026

    4 நாட்களில் 13 மில்லியன் ஃபாலோவர்ஸ்.. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் X பக்கம் முடக்கம்..!

    May 21, 2026

    நாட்டில் பொருளாதாரப் புயல்… மிட்டாய் கேக்குதா?.. மோடியை அட்டாக் செய்த ராகுல் காந்தி..!

    May 20, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    மூட் அவுட்டில் திரிஷா.. ஓ இதான் விஷயமா..!

    June 29, 2026

    குழந்தைகளுக்குத் ‘தாய்மாமன் சீர்’.. மோதிரம் வழங்கிய அமைச்சர்..!

    June 29, 2026

    ஜூன் 29: இன்று மாலை வரை இந்த தவறுகளை செஞ்சிடாதீங்க… இன்றைய 12 ராசி பலன்கள்!

    June 29, 2026

    தேவையில்லாமல் த்ரிஷாவை இழுக்காதீர்கள்.. விவாதப் பொருளான த்ரிஷா (ம) ஆர்த்தியின் புகைப்படம்..!

    June 27, 2026

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026
    Don't Miss

    மூட் அவுட்டில் திரிஷா.. ஓ இதான் விஷயமா..!

    June 29, 2026

    விஜய் – த்ரிஷா இடையிலான சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, ‘திருப்பாச்சி’ படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார் இயக்குனர் பேரரசு.

    குழந்தைகளுக்குத் ‘தாய்மாமன் சீர்’.. மோதிரம் வழங்கிய அமைச்சர்..!

    June 29, 2026

    ஜூன் 29: இன்று மாலை வரை இந்த தவறுகளை செஞ்சிடாதீங்க… இன்றைய 12 ராசி பலன்கள்!

    June 29, 2026

    ஜூன் 28: இன்று அதிர்ஷ்டக் காற்று வீசப்போகும் ‘அந்த’ ராசிகள் நீங்களா?..

    June 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.