Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»உங்களில் ஒருவனாக, சகோதரனாக பணியாற்றுவேன்.. கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!
    கோவை

    உங்களில் ஒருவனாக, சகோதரனாக பணியாற்றுவேன்.. கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 31, 2026Updated:March 31, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Senthil balaji Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி ஜெயின் சமூகத்தினரை சந்தித்து ஆதரவு திரட்டினார். கோவை தெற்கு தொகுதியில் உள்ள ஜெயின் டிரஸ்ட் க்கு சென்று அச்சமூகத்தினரை சந்தித்த அவருக்கு தலைப்பாகை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த நிகழ்வில் உரையாற்றிய செந்தில்பாலாஜி, நீங்கள் என்னை வெற்றி பெற செய்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் முதல்வர் எத்தனையோ திட்டங்களை கொடுத்துள்ளார் என்றும், உங்கள் கோரிக்கை எதுவாக இருந்தாலும் நான் நிறைவேற்றுவேன் என்றார்.

    என்னை பிரித்து பார்க்க வேண்டாம் என்றும் உங்கள் சகோதரனாக உங்களுடன் பயணிப்பேன் சிறப்பாக பணியாற்றுவேன் உங்கள் என்றார்.
    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தெற்கு தொகுதியை பொறுத்தவரை பல முன்னோர்கள் புதியவர்கள் என்று தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளார்கள் என்றார்.

    நான் கோவையில் பல வருடங்களாக பணியாற்றி வருகிறேன் அரசு பணியையும் பார்க்கிறேன் அரசியல் பணியையும் பார்த்து வருகிறேன் இது எனக்கு புது ஊர் அல்ல பல்வேறு திட்டங்களை முதலமைச்சரிடம் கேட்டு பெற்று செயல்படுத்தி உள்ளேன் என்றார்.


    மக்கள் மீது நம்பிக்கை வைத்து முதலமைச்சர் என்னை இங்கு அனுப்பி வைத்துள்ளார் எனக்கு யார் மீதும் விருப்பு வெறுப்பு கிடையாதுஎன்றார். அரசு திட்டங்களை வாக்காளர்களிடம் எடுத்து கூற உள்ளோம் ஆதரவாக வாக்களியுங்கள் என்று கேட்க உள்ளோம் என்றார். அழுத்தம் இருப்பதாக வேறு யாரோ வேண்டுமென்றால் கருதலாம் என்னை பொறுத்தவரை தொகுதிக்குள் அது போன்று எதுவும் இல்லை இந்த பகுதி மக்கள் அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள், எனவே உதயசூரியனுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.


    தேர்தலில் வெற்றி என்பது உறுதியாகி உள்ளது என்றும் மற்றவர்கள் இது போன்ற அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்(எதிர்கட்சியினர்) எனவே அவர்களுக்கு பதட்டங்கள் இருக்கலாம் என்றார். இந்த தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு அமைப்புகளையும் சங்கத்தினரையும் நேரடியாக பார்த்து ஆதரவை கேட்டு வருகிறோம் என்றார்.


    அதிமுக வேட்பாளர் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று தெரிவித்திருந்தது தொடர்பான கேள்விக்கு நாங்களும் ஒரு இலக்கு வைத்து தான் செயல்படுவோம் என்றார். 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் நான் பயணிக்க தான் போகிறேன், எதிர்க்கட்சிக்காரர்களிடம் செய்தியாளர்கள் நீங்களும் கேள்வி கேளுங்கள் கடந்த முறை எத்தனை வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்து உள்ளீர்கள்? உள்ளாட்சித் தேர்தல் நாடாளுமன்ற தேர்தலில் எவ்வளவு வாக்குகள் வித்தியாசம் உள்ளது? என்று எதிர்க்கட்சிக்காரர்களிடம் கேள்வி எழுப்புங்கள் என்றார்.கோவை தெற்கு தொகுதியை கேட்டு வாங்கி உள்ளேன் என்று அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு நான் இங்கு தான் நிற்பேன் என்று எனக்கே தெரியாது, அப்படி இருக்கும்போது அவருக்கு எப்படி தெரிந்தது?


    அவர் ஏதாவது பட்டியல் தயார் செய்து வைத்திருந்தாரா என்று அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.கோவை அதிமுக கோட்டை என்பதை 2021 தேர்தலை வைத்து பார்க்கும் போது ஒவ்வொரு தொகுதிகளும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் தொண்டாமுத்தூர் தொகுதியில் மட்டும் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்கள், இவற்றை சரி செய்தாலே எங்களுக்கு போதும் வெற்றி பெற்று விடுவோம் என்றார்.


    செந்தில் பாலாஜி பெயரிலேயே தவெக வேட்பாளர் ஒருவர் களமிறங்குவது தொடர்பான கேள்விக்கு அதனால் ஒரு குழப்பமும் வராது, என்னுடைய செந்தில்பாலாஜி என்ற பெயரிலேயே வேட்பாளர்கள் நின்றாலும் குழப்பங்கள் வராது எங்கள் சின்னம் தெளிவாக உள்ளது மக்கள் எங்களுக்கு முழு ஆதரவு தருவதற்கு தயாராக உள்ளார்கள் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை என்பது மக்கள் யாருக்கு ஆதரவு அளித்துள்ளார்கள் என்றும் மக்களின் மனநிலையையும் பார்க்கலாம் என்றார்.


    நாளை மறுநாள் 2ம் தேதி கொடிசியா மைதானத்தில் கோவையில் 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் கலந்து கொள்கிறார் என்றும் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார்.

    Coimbatore Election Campaign 2026 DMK Candidate Coimbatore South Mahavir Jayanti Coimbatore Senthil Balaji Coimbatore South Senthil Balaji Meet Jain Community Stalin Coimbatore Visit April 2 கோவை தெற்கு திமுக வேட்பாளர் கோவை தேர்தல் பிரச்சாரம் 2026 செந்தில் பாலாஜி கோவை தெற்கு செந்தில் பாலாஜி ஜெயின் சமூக சந்திப்பு மகாவீர் ஜெயந்தி கோவை ஸ்டாலின் கோவை வருகை ஏப்ரல் 2
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.