Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 6: உங்களுக்குரிய வியாழக்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»மிகப்பெரிய மோசடி கட்சி திமுக.. நிறைவேற்றாதாத வாக்குறுதிகளையே தேர்தல் அறிக்கையாக வெளியிடலாம் : அன்புமணி!
    தமிழ்நாடு

    மிகப்பெரிய மோசடி கட்சி திமுக.. நிறைவேற்றாதாத வாக்குறுதிகளையே தேர்தல் அறிக்கையாக வெளியிடலாம் : அன்புமணி!

    Prime ReporterBy Prime ReporterMarch 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    The atrocities that continue daily... In what world does Chief Minister M.K. Stalin live..Anbumani asks
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இந்தியாவின் மிகப்பெரிய மோசடிக் கட்சி திமுக தான் என்றும், புதிய தேர்தல் அறிக்கை வெளியிடத் தேவையில்லை – நிறைவேற்றாதாத 439 வாக்குறுதிகளையே தேர்தல் அறிக்கையாக வெளியிடலாம் என அன்புமணி கூறியுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக திமுக மீண்டும் ஒரு பொய்மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறது. பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த திமுக நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் தொடர்பாக இன்னுமொரு பொய்யைக் கூறி மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால் அது கனவிலும் நடக்காது.

    தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றி விட்டோம், 99% நிறைவேற்றி விட்டோம், 90% நிறைவேற்றி விட்டோம், 85% நிறைவேற்றி விட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், அவரது அமைச்சரவை சகாக்களும் வாய்க்கு வந்தபடி பொய்களைக் கூறி வந்தார்கள். இந்த மோசடியை அம்பலப்படுத்தும் வகையில் திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் வெறும் 66 வாக்குறுதிகளை, அதாவது 13% வாக்குறுதிகளை மட்டும் தான் திமுக அரசு நிறைவேற்றியிருக்கிறது. 66 வாக்குறுதிகளை அரைகுறையாக நிறைவேற்றி விட்டு, 373 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை பட்டியலிட்டு, விடியல் எங்கே? என்ற தலைப்பிலான ஆவணத்தைத் தயாரித்து கடந்த ஆகஸ்ட் 26&ஆம் தேதி சென்னையில் வெளியிட்டேன்.

    Murder of a young man in a government hospital.. Anbumani's anger against the DMK government!

    அதன்பின், நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளின் எண்ணிக்கையை 80% ஆகவும், 75% ஆகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறைத்துக் கொண்டார். ஆனால், இப்போது வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறி 100% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக நாடகமாடிக் கொண்டிருக்கிறது. கடந்த கால நாடகங்களைப் போலவே இந்த நாடகங்களும் எடுபடாது.

    திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டது என்றால்….

    1. சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் வழங்கப்பட்டு விட்டதா?
    2. டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 குறைக்கப்பட்டு விட்டதா?
    3. மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்பட்டு விட்டதா?
    4. ஐந்தரை லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலையும், 50 லட்சம் இளைஞர்களுக்கு தனியார் வேலையும் வழங்கப்பட்டு விட்டதா?
    5. மாதந்தோறும் மின்பயன்பாடு கணக்கிடப்பட்டு, ஆண்டுக்கு ரூ.6000 அளவுக்கு மின்கட்டணம் குறைக்கப்பட்டு விட்டதா?
    6. பேருந்துக் கட்டணங்கள் குறைக்கப்பட்டு விட்டனவா?
      7.இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் நடைமுறைக்கு வந்து விட்டதா?
    7. அரசுத் துறைகளில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களும், பகுதிநேர ஆசிரியர்களும் பணி நிலைப்பு செய்யப்பட்டு விட்டார்களா?
    8. ஊரக வேலைத் திட்டத்தின் வேலை வழங்கப்படும் நாள்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்பட்டு விட்டதா?
    9. மீனவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டார்களா? என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும்.

    தமிழ்நாட்டிலேயே, ஏன் இந்தியாவிலேயே, ஏன் உலகிலேயே மிகவும் மோசடியாக கட்சி என்றால் அது திமுக தான். 13 % மட்டுமே தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், 100% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன என்று கூறுவதன் மூலம் இதை திமுக மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டது.

    2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில் 439 வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாத திமுக, இந்தத் தேர்தலுக்கு புதிதாக தேர்தல் அறிக்கையை வெளியிடத் தேவையில்லை. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையே தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு விடலாம். திமுக முழுமையாக நிறைவேற்றாத 439 வாக்குறுதிகளின் பட்டியலை நான் வெளியிட்ட விடியல் எங்கே? என்ற தலைப்பிலான ஆவணத்தைப் படித்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    Anbumani CM Stalin DMK PMK Politics அன்புமணி பாமக முதலமைச்சர் ஸ்டாலின்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026

    நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்.. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் கூட்டத்தொடர்..!

    August 5, 2026

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செக்மெண்ட் சேஞ்ச்.. மெகா பட்ஜெட் பிளான் என்ன தெரியுமா?..

    August 5, 2026

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடர்க்கு முன்பே அனல் பறக்கும் அரசியல் களம்; உதயநிதி கைது: முதல்வர் போடும் கணக்கு..!

    August 4, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    ஆகஸ்ட் 6: உங்களுக்குரிய வியாழக்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 6: உங்களுக்குரிய வியாழக்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 6, 2026

    06.08.2026 வியாழக்கிழமை நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்களை இங்கே முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.