Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»வெயிலுக்கு ‘ஜில்’ தீர்வு: மக்களின் கவனத்தை ஈர்க்கும் நவீன குளிர்சாதன பேருந்து நிலையம்..!
    கோவை

    வெயிலுக்கு ‘ஜில்’ தீர்வு: மக்களின் கவனத்தை ஈர்க்கும் நவீன குளிர்சாதன பேருந்து நிலையம்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 12, 2026Updated:March 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Bus Stand UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கோவை மாவட்டம் சூலூர் பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ள முயற்சி ஒட்டுமொத்த மாவட்டத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    மாவட்டத்திலேயே முதன்முறையாக, பொதுமக்களின் வசதிக்காக நவீன குளிர்சாதன பேருந்து நிறுத்தம் (AC Bus Shelter) சூலூரில் இன்று பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது.கோயம்புத்தூர் மாவட்டத்தின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத வகையில், மிகவும் நேர்த்தியாகவும் நவீனமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    இந்த பேருந்து நிறுத்தத்தை, சூலூர் பேரூராட்சித் தலைவர் தேவி மன்னவன், எல்.ஜி மருத்துவமனைத் தலைவர் கோபிநாத், துணைத் தலைவர் லதா கோபிநாத் மற்றும் ஒன்றிய செயலாளர் மன்னவன் ஆகியோர் இணைந்து ரிப்பன் வெட்டி முறைப்படி திறந்து வைத்தனர்.

    இந்த திட்டம் குறித்து பேரூராட்சித் தலைவர் தேவி மன்னன் பேசுகையில், “தற்போது வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது. பேருந்துக்காகக் காத்திருக்கும் பொதுமக்கள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகள் இந்த வெப்பத்தால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

    இதற்கு ஒரு மாற்று வழியை யோசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான், குளிர்சாதன பேருந்து நிறுத்தத்தை உருவாக்கத் திட்டமிட்டோம். அதன் விளைவாகவே இன்று இந்த நவீன வசதி மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது,” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.இந்தப் பேருந்து நிறுத்தம் குளிர்சாதன வசதியுடன் மட்டுமல்லாமல், பயணிகளின் பாதுகாப்பிற்கும் உச்சகட்ட முக்கியத்துவம் அளித்து உருவாக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து டெக்லர் ஆட்டோமேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த பார்த்திபன் கூறுகையில், இந்தப் பேருந்து நிலையமானது முழுவதுமே உயர்தரக் கண்ணாடிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, இது எளிதில் தீப்பிடிக்காத (Fire-resistant) தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்று அதன் சிறப்பம்சங்களைப் பகிர்ந்து கொண்டார்.

    இந்த விழாவின் மற்றொரு சிறப்பம்சமாக, குளிர்சாதன பேருந்து நிறுத்தத்துடன் இணைந்து புதிய ‘செல்பி பாயிண்ட்’ ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது.சூலூர் கட்டிடப் பொறியாளர் சங்கத்தினர் மூலம் அமைக்கப்பட்ட இந்த செல்பி பாயிண்டை புலவர் செந்தலை கௌதமன் ஐயா திறந்து வைத்தார்.

    இந்நிகழ்வில் சங்கத் தலைவர் ‘பசுமை நிழல்’ விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள், பேரூராட்சி அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.ஒரு பேரூராட்சி நிர்வாகமே முன்வந்து இத்தகைய நவீன வசதிகளைச் செய்து கொடுத்திருப்பது பொதுமக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

    AC bus shelter Tamil Nadu Coimbatore first AC bus stop Coimbatore local news Coimbatore selfie point Sulur AC bus shelter Sulur town panchayat project சூலூர் ஏசி பேருந்து நிறுத்தம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.