Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»திமுக கூட்டணி கட்சி எம்பிக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லையா? டி.டி.வி தினகரன் கண்டனம்!
    தமிழ்நாடு

    திமுக கூட்டணி கட்சி எம்பிக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லையா? டி.டி.வி தினகரன் கண்டனம்!

    Prime ReporterBy Prime ReporterMarch 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    CM afraid of losing the election.. Says TTV Dhinakaran
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திமுக கூட்டணிக் கட்சியின் மக்களவை உறுப்பினருக்கே தமிழகத்தில் பாதுகாப்பில்லையா என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கார்த்தி சிதம்பரம் அவர்களின் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – திமுக கூட்டணிக் கட்சியின் மக்களவை உறுப்பினருக்கே தமிழகத்தில் பாதுகாப்பில்லையா ?

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கார்த்தி சிதம்பரம் அவர்களின் அலுவலகத்தில் இன்று அதிகாலை பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

    ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக தலைவரும், முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் குடும்பத்தினரை தவிர வேறு யாருக்குமே பாதுகாப்பில்லை என்பதை திரு.கார்த்தி சிதம்பரம் அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்தியுள்ளது.

    தமிழகத்தில் சாலைகளில், வீடுகளில், தலைவர்களின் நினைவாலயங்களில் சமூக விரோதிகளால் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்படும் சம்பவங்களை கண்டும் காணாதது போல இருக்கும் திமுக அரசின் அலட்சியப் போக்கே, திமுக கூட்டணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அலுவலகத்தின் மீதே பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கான துணிச்சலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

    எனவே, திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு கூட பாதுகாப்பு அளிக்க முடியாத அளவிற்கு தமிழகத்தின் சட்டத்தையும், ஒழுங்கையும் சந்தி சிரிக்கும் அளவிற்கு சீரழித்த திமுக அரசை வரும் தேர்தலில் மக்கள் அடியோடு துடைத்தெறிவது நிச்சயம் என்பதை மட்டும் இந்நேரத்தில் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு டேக் செய்து வலியுறுத்தியுள்ளார்.

    ammk CM Stalin DMK Politics ttv dhinakaran டிடிவி தினகரன் முதலமைச்சர் ஸ்டாலின்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி.. மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர கூட்டம்..!

    August 4, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடர்க்கு முன்பே அனல் பறக்கும் அரசியல் களம்; உதயநிதி கைது: முதல்வர் போடும் கணக்கு..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி.. மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர கூட்டம்..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.