பொதுவாக வாழைப்பழம் சாப்பிட உடன் அதன் தோலை தூக்கி எறிவோம். ஆனால், இந்த குறிப்புகள் தெரிந்து கொண்டால் நீங்கள் நிச்சயமாக அதனை செய்ய மாட்டீர்கள். சாப்பிட்டு, கீழே தூக்கி வீசுகின்ற தோலை வைத்து நீங்கள் பார்லருக்கு போய் காசு செலவு பண்ணி பளிச் என்ற முகத்தை பெறுவதற்கு பதிலாக வாழைப்பழத் தோலை வைத்து ஸ்க்ரப் செய்வதன் மூலம் முகத்தை பளபளப்பாக மாற்றலாம்.

Table of Contents
உங்கள் சருமத்தை பளபளப்பாக்குவது மட்டுமல்லாமல் கருவளையங்கள் போன்ற பிரச்சனைகளையும் நீக்கும். வாழைப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு எப்படி நல்லதோ அதைப்போல, அதன் தோளில் இருக்கும் பொட்டாசியம், வைட்டமின் பி6, வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை சருமத்திற்கு நல்ல பளபளப்பை கொடுக்கின்றன.

வாழைப்பழ தோலை முகத்திற்கு பயன்படுத்துவதன் நன்மைகள்
வாழைப்பழத்தின் தோலை முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் ஆழமாக சுத்தப்படுத்தப்படுகின்றன. அதேபோல், வாழைப்பழத்தின் தோலை வைத்து ஸ்கிரப் ஆக பயன்படுத்தி சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க முடியும். பேஸ் பேக்குகளுக்கும், பேஸ் மாஸ்களுக்கும் வாழைப்பழத் தோலை பயன்படுத்துவதன் மூலம் சருமம் நன்கு பொலிவாகவும் பளபளப்பாகவும் காணப்படும். எல்லாவற்றையும் விட இது சருமத்திற்கு தேவையான மாய்ஸ்ரைசரை கொடுத்து முகத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

வாழைப்பழ தோல் க்ளென்சர்
மார்க்கெட்டுகளில் பல க்ளென்சர்கள் விற்கப்படுகின்றன. நம் சருமத்தில், கொஞ்சமாவது அழுக்குகள் இருந்து கொண்டே தான் இருக்கும். அது முழுமையாக க்ளன்ஸ் செய்கிறதா என்று தெரியாது. ஆனால், இந்த வாழைப்பழ தோல் அப்படி அல்ல சருமத்தில் உள்ள துளைகளின் ஆழம் வரை சென்று சருமத்தை நிச்சயமாக சுத்தப்படுத்தும்.

பயன்படுத்தும் முறை
வாழைப்பழத்தின் தோலை சிறிது பால் சேர்த்து ஸ்மூத்தாக பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளுங்கள். அதை முகத்தில், அப்ளை செய்து கொண்டு 15லிருந்து 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து காய்ந்ததும் சுத்தமான தண்ணீர் கொண்டு தேய்த்து முகத்தை கழுவுங்கள். கருவளையம் நீக்க வாழைப்பழத் தோலை பயன்படுத்தலாம். கண்ணுக்கு கீழ் கருப்பாக கருவளையங்கள் இருப்பது பலருக்கு தன்னம்பிக்கையை குறைத்து விடுகிறது. இவ்வாறான கருவளையங்கள் உண்டாவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

அதில், முதன்மையான காரணம் சோர்வும் மன அழுத்தமும், போதிய தூக்கம் இல்லாமையும் தான். இரவில், நீண்ட நேரம் தூங்காமல் இருப்பது தூக்கத்தில் இடையிடையே எழுந்திருப்பது போன்றவற்றால், சோர்வடைந்து கருவளையம் உண்டாகிறது. இந்த கருவளையத்தை போக்க ஆன்லைனில் கிரீம்கள் கிடைத்தாலும், இந்த வாழைப்பழத்தின் தோலை மட்டும் வைத்து சரி செய்து விட முடியும்.
வாழைப்பழத்தின் தோலை சிறிய சைசாக கட் செய்து கொண்டு, உட்புறத்தில் இருக்கும் வெள்ளை நிற பகுதியை கண்ணுக்கு கீழ் கருவளையம் உள்ள இடங்களில் மெதுவாக தேய்த்து, மென்மையாக மசாஜ் செய்து வர நாளடைவில் கருவளையர்கள் மறைய தொடங்கும்.

வாழைப்பழ தோல் ஃபேஸ் மாஸ்க்
தேவையான பொருட்கள்
- ஒரு வாழைப்பழ தோல்
- ஒரு டீஸ்பூன் தயிர்
- ஒரு டீஸ்பூன் தேன்
இந்த மூன்று பொருட்கள் மட்டும் இந்த ஃபேஸ் பேக்குக்கு போதுமானது. வாழைப்பழத்தின் தோலின் காம்புகளை நீக்கிவிட்டு, சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். பிறகு, அதில் தயிருடன், தேனும் சேர்த்து மீண்டும் கலந்து கொள்ளுங்கள்.
இப்போது, உங்கள் ஃபேஸ் மாஸ்க் ரெடியாக உள்ளது. முகத்தை நன்கு சுத்தமாக கழுவிக்கொண்டு, இந்த ஃபேஸ் மாஸ்க்கை முகம் மற்றும் கழுத்து பகுதியில், அப்ளை செய்து கொள்ளுங்கள்.

20 நிமிடங்கள் அப்படியே உலர விட்டு பிறகு முகத்தை சாதாரண தண்ணீர் கொண்டு கழுவலாம். இறந்து செல்களை நீக்குகிறது. இனியாவது வாழைப்பழத் தோலை சாப்பிட்டுவிட்டு, அதன் தோலை கீழே தூக்கி வீசாமல் ஆயுள் கணக்கில் செலவு பண்ணி சருமத்திற்கு, விதவிதமான கிரீம்களை வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக கீழே தூக்கி வீசுகிற வாழைப்பழத் தோலை வைத்து உங்கள் சருமத்தை மேலும் பளபளப்பாகவும் அழகாகவும் மாற்றலாம்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

