Close Menu
    What's Hot

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»திமுக ஆட்சி சீர்குலைந்த ஆட்சி, சீழ்பிடித்துப் போன ஆட்சி.. ஆதவ் அர்ஜூனா அடுக்கடுக்கான புகார்!
    தமிழ்நாடு

    திமுக ஆட்சி சீர்குலைந்த ஆட்சி, சீழ்பிடித்துப் போன ஆட்சி.. ஆதவ் அர்ஜூனா அடுக்கடுக்கான புகார்!

    Prime ReporterBy Prime ReporterMarch 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    The DMK government is a corrupt government, a rotten government.. Aadhav Arjunacomplaints
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா திமுக ஆட்சியை சரமாரியாக குறை கூறியுள்ளார்.

    எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகம், ‘வெற்று விளம்பர மாடல்’ தி.மு.க ஆட்சியில் அச்சமூட்டும் கொலைக்களமாக மாறி இருக்கிறது. நரகத்தில் வாழ்வதைப்போல, தினம்தோறும் மனம் பதைபதைத்து வாழும் கொடுந் துயரத்தில் சிக்கி இருக்கின்றனர் தமிழக மக்கள்.

    பாதுகாப்பான சூழலில், அமைதியாக வாழ வேண்டிய பொதுமக்கள் ஒவ்வொரு நிமிடமும் பயந்து பயந்து… பதைபதைத்து வாழும்போது, ஆளும்கட்சியின் ஆதரவோடு இருக்கும் குற்றவாளிகள் தைரியமாக வலம்வரும் அவலமும் நடக்கிறது.

    திறனற்ற தி.மு.க அரசாங்கத்தில் சட்டம்-ஒழுங்கு எவ்வாறு சீர்குலைந்து – சீழ்பிடித்துப் போய் இருக்கிறது என்பதற்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நடைபெற்ற சம்பவங்களையே சாட்சியாகக் காட்டலாம்!

    திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியிலும், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மக்கும்பல்கள் பொதுமக்களை சரமாரியாக வெட்டி சாய்த்தது; அதில், இரண்டு பேர் பலியானது.

    சென்னை திரிசூலத்தில் நடைபெற்ற இரட்டைக் கொலை.

    கிருஷ்ணகிரியில் 70 வயது முதியவரை கொலைசெய்துவிட்டு, அவரது 60 வயது மனைவிக்கு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது.

    சென்னையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் பணிபுரிந்த பணிப்பெண், தி.மு.க கவுன்சிலர் ஒருவரால் பலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது.

    நாமக்கல்லில் 7 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது.

    சென்னை காசிமேட்டில் தி.மு.க நிர்வாகி ஒருவரால், இளம்பெண் வயிற்றிலும் பிறப்புறுப்பிலும் எட்டி உதைக்கப்பட்ட கொடூரம் – என நாள்தோறும் தமிழகத்தில் நடைபெறும் சம்பவங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. காவல்துறை என ஒன்று இருக்கிறதா? அது செயல்படுகிறதா? என்ற சந்தேகத்தைத்தான் இந்த தொடர் சம்பவங்கள் எழுப்புகின்றன.

    2 வயது குழந்தை முதல் 70 வயது மூதாட்டி வரை… எந்தப் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல், ஒரு வன்முறை சம்பவம் ஏற்படுத்திய பேரதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், அடுத்த வன்முறைச் சம்பவம் இன்னும் கொடூரமாக நடைபெறும் ஆபத்து என கொலைக்களமாகவும், பாலியல் கொடுமைக்காடாகவும், போதையில் தள்ளாடும் நிலைக்கும் தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. ஆனால், இவற்றைக் குறித்து, எந்தக் கவலையும் இல்லாத, தமிழக முதலமைச்சர் வேறொரு கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிக்கிறார்.

    தமிழக மக்களின் பாதுகாப்பில் கொஞ்சமும் அக்கறை காட்டாத முதலமைச்சர், தினம்தோறும் எந்த ரியாலிட்டி ஷோ-வில் கலந்து கொள்ளலாம் என்பதையே திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். அப்படிக் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில், தனக்கு நெருக்கமான துதிபாடிகளை வைத்து, “அற்புதமான ஆட்சி, அமைதியான ஆட்சி, வளர்ச்சியை நோக்கிய ஆட்சி” என பொய்யைப் பேச வைத்து, போலியாக மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார்.

    The DMK government is a corrupt government, a rotten government.. Aadhav Arjunacomplaints

    ஆனால், எதார்த்தத்தில் தமிழகத்தில் நடப்பது, “அவலமான ஆட்சி, அச்சமூட்டும் ஆட்சி, ஆபத்தான ஆட்சி, சீர்குலைந்த ஆட்சி, சீழ்பிடித்த ஆட்சி” என்பதுதான் நிதர்சனம். இப்படிப் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் எதிரான திமுக ஆட்சியை ஒட்டுமொத்தத் தமிழக மக்களும் தூக்கி எறியும் நாள் தூரத்தில் இல்லை! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Aadhav Arjuna CM Stalin DMK TVK ஆதவ் அர்ஜூனா தவெக திமுக அரசு முதலமைச்சர் ஸ்டாலின்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    விஜய்யின் ‘சிங்கப்பெண்’ படை.. 12 மண்டலங்களில் அதிரடி ரோந்து..!

    June 9, 2026

    9 மாவட்டங்களுக்கு அலர்ட்.. மாறிப்போன கிளைமேட்.. கொட்டப்போகும் இடி மின்னல் மழை..!

    June 9, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    மூன்றே நாளில் 17 லட்சம் உறுப்பினர்கள்.. அண்ணாமலை நெகிழ்ச்சிப் பதிவு..!

    June 8, 2026

    நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை?.. தவெக தலைமையைச் சாடிய நயினார் நாகேந்திரன்..!

    June 8, 2026

    மின்சாரம் தாக்கி 80 பேர் உயிரிழப்பு.. அரசுக்கு அன்புமணி ராமதாஸ் ட்வீட்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026
    Don't Miss

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    கோவை துடியலூரில் பொது வழித்தடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற நில அளவையர்கள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களின் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர்.

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.