Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»போராடிய மாற்றுத்திறனாளிகளை இரவு முழுவதும் அலைக்கழிப்பதா? திமுக அரசுக்கு டிடிவி கண்டனம்!
    தமிழ்நாடு

    போராடிய மாற்றுத்திறனாளிகளை இரவு முழுவதும் அலைக்கழிப்பதா? திமுக அரசுக்கு டிடிவி கண்டனம்!

    Prime ReporterBy Prime ReporterFebruary 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    TTV condemns the DMK government
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    உதவித் தொகையை உயர்த்தக் கோரி போராடிய மாற்றுத் திறனாளிகளை இரவு முழுவதும் அலைக்கழிப்பதா என திமுக அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், உதவித் தொகையை உயர்த்தக் கோரி போராடிய மாற்றுத் திறனாளிகளை இரவு முழுவதும் அலைக்கழிப்பதா? – அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருக்கும் திமுக அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

    மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி சென்னை மாற்றுத்திறனாளிகள் ஆணையரகத்தில் தொடர் போராட்டம் நடத்தி வந்த மாற்றுத்திறனாளிகளைப் பேருந்தில் ஏற்றி இரவு முழுவதும் அலைக்கழித்ததோடு அவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் திரு கே.பாலகிருஷ்ணன் அவர்களின் மனைவியும், மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவருமான திருமதி ஜான்சிராணி உட்பட பலர் காயமடைந்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

    கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மிகக்குறைவான உதவித் தொகையை வழங்கி வஞ்சித்து வரும் திமுக அரசு, தற்போது அதனை உயர்த்தி வழங்கக் கோரி போராடும் மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிப்பதும், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து தராமல் சித்ரவதை செய்வதும் கடும் கண்டனத்திற்குரியது.

    தங்களின் வாழ்வாதார கோரிக்கையை முன்னிறுத்தித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத்திறனாளிகளை அழைத்துப் பேசி, உரிய தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டிய திமுக அரசு, தங்களிடம் இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை அடக்கி ஒடுக்க நினைப்பது முழுக்க முழுக்க சர்வாதிகாரப் போக்கையே வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

    TTV condemns the DMK government

    எனவே, காவல்துறையால் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உரிய சிகிச்சை வழங்கிடுவதோடு, நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி அறிவித்திட வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ammk CM Stalin DMK Politics ttv dhinakaran அரசியல் டிடிவி தினகரன் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் முதலமைச்சர் ஸ்டாலின்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.