Close Menu
    What's Hot

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»இதுவும் தீண்டாமைதான்.. இந்த பாவம் உங்க குடும்பத்தையே கருவருக்கும்.. சுரேஷ் காமாட்சி சாபம்!
    சினிமா

    இதுவும் தீண்டாமைதான்.. இந்த பாவம் உங்க குடும்பத்தையே கருவருக்கும்.. சுரேஷ் காமாட்சி சாபம்!

    Prime ReporterBy Prime ReporterJanuary 2, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    This is also untouchability.. Curse of Suresh Kamakshi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சின்ன பட்ஜெட் படமாக உருவாகியுள்ளது சல்லியர்கள். வி ஹவுஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தை கிட்டு என்பவர் இயக்கியுள்ளார்.

    சத்யாதேவி, மகேந்திரன், கருணாஸ், மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்திருந்தனர். ஆனாதல் போதுமான அளவில் தியேட்டர்கள் ஒதுக்காததால் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.

    இது குறித்து PVR சினிமாஸ் குரூப்பை நேரடியாக சாடியுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், எமது வி ஹவுஸ் புரொடக்ஷன் வெளியீடாக சல்லியர்கள் என்ற படத்தை ஜனவரி ஒன்று அதாவது இன்று வெளியிட இருந்தோம். வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு பார்த்தால் திரையரங்குகள் கிடைக்கவில்லை. வெறுமனே 27 திரையரங்குகள் மட்டுமே கிடைக்கின்றன. இன்று சிறிய படங்களின் நிலை இப்படித்தான் பரிதாபமாக இருக்கிறது.

    வெறும் 27 திரையரங்குகளை வைத்துக்கொண்டு படத்தை எப்படி வெளியிடுவது? அதனால் எங்கள் படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை.
    ஆனாலுய் எந்த பெரிய படமும் வெளியாகவில்லை. அப்படியிருந்தும் திரையரங்குகள் தரவில்லை.

    நாங்கள் எடுத்திருப்பது தமிழ் மக்கள் சார்ந்து ஈழப் போராட்டம் சார்ந்து எடுத்துள்ள தமிழ் மக்களுக்கான படம். எம் மக்களுக்கான படத்தை இங்கே வெளியிட இவ்வளவு போராட்டமாக உள்ளது. குறிப்பாக பிவிஆர் திரையரங்கம் ஒரு திரையரங்குகூடத் தரவில்லை. திரையரங்கு கேட்டு பேசிப் பார்த்தும் கிடைக்கவில்லை. அழைத்தால் போனையே எடுக்கவில்லை. அத்தனை திரையரங்குகளும் நிரம்பியா வழிகிறது? தராமலிருக்க!

    எங்கிருந்தோ வந்து எம் மக்கள் பணத்தை சுரண்டிக் கொழுத்துவிட்டு எம்மையே புறக்கணிக்கும் செயலைச் செய்ய முடிவதெப்படி? பெரிய படங்களுக்கு கொடுக்கும் மரியாதையை சிறிய படங்களுக்கு தராததும் ஒரு நவீன தீண்டாமைதான்.

    இங்கிருக்கும் சங்கங்கள் சரியில்லை. அவர்களுக்குள் ஒற்றுமையில்லை. எத்தனை சிறுபடங்கள் நசுக்கப்பட்டுள்ளது? முறைப்படுத்த எந்த முயற்சியும் செய்யவில்லை. செய்ய இயலவில்லை.

    காரணமற்ற காரியங்களில் கவனம் செலுத்தும் இவர்கள் ஏன் கார்ப்பரேட் முதலாளிகளை முறைப்படுத்தவில்லை? சிறிய படங்களுக்கான திரையரங்குகள் பிவிஆர் போன்றவற்றில் வெளியிட ஏன் திட்டம் தீட்டவில்லை? ஒன்றிணைந்து போராடாதவரை எதுவுமே நடக்க வாய்ப்பில்லை.

    இன்று சுரேஷ் காமாட்சிக்கு நடந்தது நாளைக்கு இன்னொரு தயாரிப்பாளருக்கு நடக்கலாம். ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்கள் நிறைய இருக்கிறார்கள்.

    ஒரு படம் ஓடாதுன்னு தீர்மானிக்க இவர்கள் யார்?! திரையரங்கு கொடு. படம் ஓடலைன்னா தூக்கு. பரவாயில்லை. ஆனால் முன்கூட்டியே தீர்மானிக்க அவர்கள் படம் பார்த்தார்களா? இல்லையே! அப்படியிருக்கும்போது ஏன் திரையரங்கு தர மறுக்கவேண்டும்?!

    ஒரு ஈழத் தமிழ் படத்தை வெளியிடக்கூடாது என்பதில் எங்கிருந்தோ வந்து இங்கு கோலோச்சும் இந்த கார்ப்பரேட் முதலாளித்தும் தீர்மானிப்பது வெட்கக் கேடானது. கர்நாடகாவிலோ ஆந்திராவிலோ அவர்கள் சமூகம் சார்ந்து வெளியாகும் படத்தை வெளியிட முடியாது… திரையரங்கு தரமுடியாது என சொல்லிவிட முடியுமா? காரணம் அவங்க முறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். சிறிய படங்கள் ஓடுகிறது. ராஜூ வெட்ஸ் ரம்பை என்ற சிறு முதலீட்டுப் படம் 22 கோடி வசூலித்திருக்கிறது. காரணம் திரையரங்கு அவர்களுக்கு கிடைக்கிறது. நமக்கு நல்ல படம்தான் எடுத்திருக்கிறோமா? மக்கள் வந்து பார்ப்பார்களா? என்பதைத் தெரிந்துகொள்ளக் கூட வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.

    பெரிய படங்களில் காசு பார்த்துக் கொண்டு சிறு படங்களை நசுக்கி கொல்கிறார்கள். இப்படியே போனால் தமிழ் சினிமா மெல்லச் சாகும். ஏற்கெனவே செத்துப்போய்தான் இருக்கிறது. இனியும் இந்நிலை தொடர்ந்தால் அவ்வளவுதான்.

    This is also untouchability.. Curse of Suresh Kamakshi

    விழித்துக் கொள்ளுங்கள் தயாரிப்பாளர்களே. இன்று நான் நாளை நீங்கள். சல்லியர்கள் படம் OTT PLUS என்கிற தளத்தில் வெளியாக உள்ளது. உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் இப்படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள். பத்திரிகையாளர்கள் காட்சியில் பார்த்துவிட்டு கலங்கி அனைவரும் சொன்ன வார்த்தை பார்க்க வேண்டிய படம்.. பதிவு செய்ய வேண்டிய ஒன்று என்று.

    ஒரு நல்ல படத்தைப் புறக்கணித்தவர்களுக்கு சிறந்த பாடமாக இதன் வெற்றி அமைய மக்கள் அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இதே பிரசாத் லேப் திரையரங்கில் இப்படம் வெற்றிப்படம் என்பதை அறிவிக்கும் விழா நடக்கும் என்ற உறுதி தருகிறேன். உலகத் தமிழர்களின் ஆதரவோடு… நன்றி!இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    Salliyars Suresh Kamatchi சல்லியர்கள் சுரேஷ் காமாட்சி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026

    விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்.. அடுத்த நொடியே வைரலான த்ரிஷா பதிவு..!

    August 1, 2026

    கிளாசிக்கல் கலை தவறாக ஆடப்படுகிறதா?.. பிரபுதேவா மீதான விமர்சனம்..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்.. அரசியல் திருப்பங்களுக்கு நடுவில் தமிழக சட்டசபை..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026
    Don't Miss

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    கோவையில் சிறுவர்கள் விளையாடிய பந்து சுவரில் பட்ட தகராறில் பெண்ணைத் தாக்கி தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.