Close Menu
    What's Hot

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    பலிபீடத்தைத் தொட்டு வணங்கக் கூடாதா?.. உண்மையான ஆன்மீகத் தத்துவம்..!

    June 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»நேரமில்லை என சொல்லும் முதலமைச்சருக்கு சினிமா பார்க்க மட்டும் நேரம் உள்ளதா? தமிழிசை சரமாரிக் கேள்வி!
    தமிழ்நாடு

    நேரமில்லை என சொல்லும் முதலமைச்சருக்கு சினிமா பார்க்க மட்டும் நேரம் உள்ளதா? தமிழிசை சரமாரிக் கேள்வி!

    மத்திய அரசை விமர்சிப்பவர்களை உடனே “சங்கி” என குற்றம்சாட்டும் போக்கு அதிகரித்து உள்ளதாகவும், கலாச்சாரம், மொழி, பாரம்பரியத்தை போற்றுபவர்கள் அனைவரையும் சங்கிகள் தான்
    Prime ReporterBy Prime ReporterDecember 29, 2025Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Tamilisai Criticized Chief Minister Stalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.

    தமிழ்நாட்டில் தற்போது கலாச்சார போர் நடைபெற்று வருவதாகவும், சமூக நீதி விவகாரங்களில் அரசின் கவனம் குறைந்து உள்ளதாகவும் அவர் கூறினார்.ஈரோடு, கரூர் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் சமைத்த உணவை பரிமாற அனுமதிக்கவில்லை என்ற சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர், இது மிகுந்த வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.

    இவ்விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.போக்குவரத்து கட்டண உயர்வை குறித்து பேசுகையில், ரயில் கட்டணம் குறைவாக இருந்தாலும், ஆம்னி பேருந்து கட்டணம் மூண்மடங்கு உயர்ந்து உள்ளதாகவும், பண்டிகை காலங்களில் மக்கள் கடும் சுமை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

    பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ் கட்டண உயர்வை தமிழக அரசு கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு ஊழியர் நலன் உள்பட அனைத்து துறைகளிலும் முற்றிலும் தோல்வி அடைந்து உள்ளது. நேருக்கு நேர் விவாதிக்க அழைத்தால் நேரமில்லை என சொல்லும் முதல்வர் சினிமா பார்பதற்கு மட்டும் நேரம் இருக்கிறதா ?

    Tamilisai Criticized Chief Minister Stalin

    முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு இதை முதன்மையாக கவனிக்க வேண்டும் என கூறினார்.தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை கொண்டாடுவதில் மத்திய அரசு, குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி முனைப்புடன் செயல்படுவதாகவும், காசி தமிழ் சங்கமம், சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் போன்ற நிகழ்வுகளை எடுத்துக்காட்டினார்.

    தமிழை கொண்டாடுவது பா.ஜ.க என்றும், தமிழை திண்டாட வைப்பது தமிழக அரசு என்றும் விமர்சித்தார். ஆசிரியர் மற்றும் கல்லூரி விரிவுரையாளர் தேர்வுகளில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சாதனைகள் குறித்து கேள்விகள் இடம் பெற்று உள்ளதாக குற்றம்சாட்டிய அவர், இது வெளிப்படையான பாரபட்சம் எனக் கூறி கடும் கண்டனம் தெரிவித்தார்.

    பெண்கள் மாநாடு நடத்தும் அரசு, அதே நேரத்தில் செவிலியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் துன்புறுத்தப்படுவதாகவும், அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் கூறினார். இவை அனைத்தும் தற்போதைய ஆட்சியின் அவலத்தை வெளிப்படுத்துவதாக விமர்சனம் செய்தார்.

    தமிழ்நாட்டின் கடன் சுமையை சுட்டிக்காட்டிய அவர், ஒருவருக்கு ரூ.1.27 லட்சம் கடன் சுமை இருப்பதாகவும், மாதம் ரூ.8,000 வட்டி சுமை ஏற்படுவதாகவும் கூறினார்.ரூ.1,000 உதவித் தொகை வழங்கி பெரிய கடன் சுமையை மக்களின் தலைமேல் ஏற்றுவது திராவிட மாடல் ஆட்சி என விமர்சித்தார்.

    மத்திய அரசை விமர்சிப்பவர்களை உடனே “சங்கி” என குற்றம்சாட்டும் போக்கு அதிகரித்து உள்ளதாகவும், கலாச்சாரம், மொழி, பாரம்பரியத்தை போற்றுபவர்கள் அனைவரையும் சங்கிகள் தான். இவ்வாறு அவர் கூறினார்.

    BJP CM Stalin Coimbatore Coimbatore News DMK Tamilisai Soundararajan கோவை தமிழிசை திமுக திமுக அரசு முதலமைச்சர் ஸ்டாலின்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026

    ராகவா லாரன்ஸ் ‘இந்த’ துறைக்கு அமைச்சர்?.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

    June 13, 2026

    டிரைவிங் சீட்டில் அமர்ந்த முதல்வர்.. CM ஆனாலும் பந்தா இல்லை..!

    June 13, 2026

    தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்.. வெளுத்து வாங்கிய வானதி சீனிவாசன்..!

    June 12, 2026

    மீனவர் வாழ்வாதாரமும், கடல் வளமும் அழியும்.. ஹைட்ரோ கார்பன் திட்டம் – டிடிவி தினகரன் ஆருடம்..!

    June 12, 2026

    Zero tolerance-ஆ? இல்லை Zero Control-ஆ?.. நயினார் நாகேந்திரன் கேள்வி..!

    June 12, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    டிரைவிங் சீட்டில் அமர்ந்த முதல்வர்.. CM ஆனாலும் பந்தா இல்லை..!

    June 13, 2026

    பழங்கள் சாப்பிட்டாலும் முகப்பரு வருமா?.. இதைப் பண்ண மறக்காதீங்க..!

    June 13, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    இந்த 4 பருப்புகளுக்குள் இத்தனை ரகசிய நன்மைகளா?.. விபரம் உள்ளே..!

    June 13, 2026
    Don't Miss

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    கோவை மணியக்காரன்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சம்பத்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளிடம் மருத்துவ வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார்.

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    பலிபீடத்தைத் தொட்டு வணங்கக் கூடாதா?.. உண்மையான ஆன்மீகத் தத்துவம்..!

    June 13, 2026

    பழங்கள் சாப்பிட்டாலும் முகப்பரு வருமா?.. இதைப் பண்ண மறக்காதீங்க..!

    June 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.