Browsing: தமிழ்நாடு

தவெக அரசின் முதல் பட்ஜெட் ‘ப்ளாஸ்ட்’ ஆகும் என எதிர்பார்த்த மக்களுக்கு ‘வேஸ்ட்’ எனச் சொல்லும் வகையில் அமைந்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

கூவம் நதி சீரமைப்பு மற்றும் மின்சார பேருந்துகளைப் பாராட்டியுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

புதிய திட்டங்களை அறிவிக்காமல் பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல் செய்வதாக தவெக அரசுப் பட்ஜெட்டை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் 2026-27 நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டில் கல்வி, மகளிர் நலம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.2,132 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்துள்ள தவெக அரசின் முதல் முழு பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம் மற்றும் மகளிர் நலனுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையைக் கண்டித்துள்ள திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி, அரசியலில் இதுபோன்று இதுவரை வரலாற்றில் நடந்ததே இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இல்லாமல் சட்டப்பேரவை நடவடிக்கைகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.