Author: Prime Reporter

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கும் உட்பட்ட அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் கடந்த 07.12.25. அன்று அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோசப் அலி சஜிதா பேகம் இவருடைய மகன் சைபுல் அலாம் வீட்டின் அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்த போது அப்பகுதியில் பதுங்கி இருந்த சிறுத்தை தூக்கிச் சென்று தாக்கியதால் உயரிழந்தான். இந்த நிலையில் தற்போது அப்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக அப்பகுதியை சிறுத்தை அடிக்கடி உலா வருவது சிசிடிவி கேமராவில் பதிவாகி வைரலாகி வருகிறது. இதனை வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டு வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து முன்னோட்டம் பார்க்கப்பட்டது. மேலும் வால்பாறை பகுதியில் சிறுத்தை கரடிகளால் உயிர் சேதம் அதிகரித்து வரும் நிலையில் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தற்போது கூண்டு வைத்துள்ளனர். மேலும் அப்பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையால் அப்பகுதியில் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.…

Read More

2026 சட்டசபை தேர்தல் குறித்து லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் பரபரப்பு கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக-பாஜக, தவெக, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் யார் வெல்வார்கள் என லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளனர். 234 தொகுதிகளில் 81,375 பேரிடம் எடுக்கப்பட்ட முடிவு வெளியாகியுள்ளது. இந்த கருத்துக்கணிப்புகள் படி முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வருவார் என்றும், முதலமைச்சர் வேட்பாளர்களுக்கான கருத்து கணிப்பில் விஜய் 2வது இடத்தை பிடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமியை முந்தி விஜய் 2வது இடத்திற்கு வந்துள்ளார் என்பது ஆச்சரியத்தை தந்துள்ளது. இந்த கருத்துகணிப்பு நகரங்களில் 54.8 சதவிகிதமும், மீதி இடங்களில் 45.2 சதவிதிகதமும் எடுக்கப்பட்டுள்ளது. 21 வயது முதல் 30 வயதினர் உடையவர்கள் 25.6…

Read More

பிக்பாஸ் தமிழ் 9வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கிட்டத்தட்ட 90 நாட்களை எட்டியுள்ளதால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வாக்குவாதம், மோதல், சர்ச்சைகளால் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மற்றும் நாளை வார இறுதி நாட்கள் என்பதால் விஜய் சேதுபதி எவிக்சன் பிராசஸ் அறிவிப்பார் என்பது அனைவரும் தெரிந்ததே. ஆனால் கம்ருதீன் மற்றும் பார்வதியை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்று நேற்று முதல் சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட விமர்சனங்கள் விழுகின்றன. காரணம் நேற்று நடந்த கார் டாஸ்கில், சாண்ட்ராவை கேவலமான வார்த்தைகளால், கம்ருதீன் மற்றும் பார்வதி பேசியது, சாண்ட்ராவை எட்டி உதைத்து காரில் இருந்து தள்ளிவிட்டது போன்றவை காரணமாக உள்ளது. கடைசி வரை காரில் இருப்பவர்கள் டிக்கெட் டூ ஃபைனலை வெல்வார்கள் என்பதால், போட்டியாளர்களிடையே மோதல் இருந்தது. அதே சமயம் ஒருவர் ஒருவரை தள்ளி இழுத்து, மோதியது சர்ச்சையை ஏற்படுத்தியது. காருக்குள் இருந்த…

Read More

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே உள்ள காட்டுக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன் (43). இவரது மனைவி கலையரசி (33). இவர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், மூன்று மகன்கள் உள்ளனர். கலையரசியின் நடத்தையில் கருணாகரனுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கலையரசி உணவு உண்டுவிட்டு தூங்கச் சென்றுள்ளார். ஆனால் மறுநாள் காலை 7 மணியை கடந்தும் கலையரசி தூக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை. எழுப்பிப் பார்த்தபோதும் அசைவின்றி கிடந்ததை கண்டு, கருணாகரன் இதுகுறித்து தனது மனைவியின் தந்தைக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கலையரசியின் பெற்றோர், அவர் உயிரிழந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மகளின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதால், அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாகரனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த…

Read More

கோவையில் கடந்த நவம்பர் மாதம் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் இன்று கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் கருப்பசாமி (எ) சதீஷ், கார்த்திக் (எ) காளீஸ்வரன், தவசி (எ) குணா ஆகிய மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின் போது, வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் நடைமுறை விபரங்கள் பரிசீலிக்கப்பட்டன. இதனையடுத்து, மேலதிக விசாரணைக்காக வழக்கை வரும் ஜனவரி 9-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Read More

ஒரு சிலரின் சுயநலத்தால் தமிழக காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்கிறது என கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், எந்த ஒரு அரசியல் கட்சியும் ,தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினரை,தேர்தல் நேரத்தில்,தேர்தல் ஆணையத்திற்கு வாக்குச் சாவடி முகவர் பட்டியலை கொடுக்க விடாமல் முடக்க வேண்டும் என்று நினைக்காது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் அது நடக்கிறது. தமிழ்நாடு காங்கிரசில் நடைபெறும் விசயங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. கொள்கை நிலைப்பாடுகளை, அரசியல் செயல்பாடுகளை நீர்த்துப் போகச் செய்ய நடக்கும் முயற்சிகள் மிகுந்த வேதனை அளிக்கிறது . தினமும் தமிழ்நாடு காங்கிரஸ், மக்கள் பிரச்சினகள் அல்லாத தவறான காரணங்களுக்காகவே செய்திகளில் அடிபடுகிறது. தமிழ்நாடு எந்தக் காலத்திலும் இல்லாத ,ஒரு பேராபத்தை, மதவாத, பிரிவினைவாத, வன்முறை சக்திகளிடமிருந்து எதிர்நோக்கி உள்ளது. எதையாவது செய்து, மக்கள் உணர்வுகளைத் தூண்டி ,ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து, பெருந்தலைவர் காமராசர்,…

Read More

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சிங்காரா வனச்சரகப் பகுதியில் இன்று (02.01.2026) அதிகாலை யானை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்காரா வனபகுதி, மாயார் சாலை அருகே உள்ள மணி வொர்க் ஷாப் அருகிலுள்ள குழும வீடுகள் பகுதியில் வசித்து வந்த மணிகண்டன் (50), தந்தை குமார், இன்று அதிகாலை சுமார் 5.30 மணி அளவில் தனியாக தேநீர் கடைக்கு சென்று கொண்டிருந்த போது, வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த காட்டு யானை ஒன்று திடீரென தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த மணிகண்டனின் உடல் உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு (GH) கொண்டு செல்லப்பட்டு, உடற்கூறு பரிசோதனை (Postmortem) மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தையடுத்து, வனத்துறை சார்பில் உடனடி இழப்பீடு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

Read More

கோவை, குனியமுத்தூர் நரசிம்மபுரம் ஸ்ரீ ஐயப்பா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெபா மார்டின், இவர் அங்கு உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அரையாண்டு தேர்வுகள் முடிவு அடைந்து விடுமுறை நாள் என்பதால் தனது குடும்பத்துடன் கிறிஸ்மஸ் கொண்டாட உறவினர் வீட்டுக்கு சென்று உள்ளார். இந்நிலையில் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த 104 சவரன் தங்க நகை ரூபாய் 10 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து கோயமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். காவல்துறை விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தற்பொழுது கோவை சங்கனூர், கண்ணப்பன் நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் பூட்டிய வீடுகளை மட்டும் நோட்டம் விட்டு வீட்டில் குடியிருப்பவர்கள் வெளியூர் சென்ற நேரங்களில் கண்காணித்து இரவு நேரங்களில் வீட்டில் கள்ளச்…

Read More

சின்ன பட்ஜெட் படமாக உருவாகியுள்ளது சல்லியர்கள். வி ஹவுஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தை கிட்டு என்பவர் இயக்கியுள்ளார். சத்யாதேவி, மகேந்திரன், கருணாஸ், மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்திருந்தனர். ஆனாதல் போதுமான அளவில் தியேட்டர்கள் ஒதுக்காததால் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. இது குறித்து PVR சினிமாஸ் குரூப்பை நேரடியாக சாடியுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், எமது வி ஹவுஸ் புரொடக்ஷன் வெளியீடாக சல்லியர்கள் என்ற படத்தை ஜனவரி ஒன்று அதாவது இன்று வெளியிட இருந்தோம். வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு பார்த்தால் திரையரங்குகள் கிடைக்கவில்லை. வெறுமனே 27 திரையரங்குகள் மட்டுமே கிடைக்கின்றன. இன்று சிறிய படங்களின் நிலை இப்படித்தான் பரிதாபமாக இருக்கிறது. வெறும் 27 திரையரங்குகளை வைத்துக்கொண்டு படத்தை எப்படி வெளியிடுவது? அதனால் எங்கள் படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை.ஆனாலுய்…

Read More

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே சட்டவிரோத கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனைத் தொடர்ந்து வத்தலக்குண்டு கோம்பைப்பட்டி சாலையில் போலீசார் வாகன சோதனைகள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது அவ்வழியே புதிய இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் போலீசாரை கண்டதும் அதிவேகமாக தப்பி சென்றனர் அவர்களை விரட்டிப் பிடித்த போலீசார் வாகனத்தை சோதனை செய்த போது அதில் கால் கிலோ கஞ்சா பொட்டலம் இருப்பதை கண்டு பறிமுதல் செய்தனர். விசாரணையில் வெளி மாநிலத்திலிருந்து கஞ்சா வாங்கி வந்து சில்லரை விற்பனையில் இளைஞர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து கோம்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (19) ஹரிஷ் (20) ஆகிய இரண்டு இளைஞர்களை கைது செய்த போலீசார் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய புதிய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். கேட்பதற்கு யாரும் இல்லாத புள்ளிங்கோ ஸ்டைலில் செயல்பட்டுக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவரும் கஞ்சா வழக்கில் போலீசாரால் கைது…

Read More