Close Menu
    What's Hot

    மத்திய அரசு வேலை: SSC Phase XIV 2026 அறிவிப்பு வெளியீடு! 2,919 காலியிடங்கள்

    April 22, 2026

    கேதார்நாத் யாத்திரை 2026: இன்று நடைதிறப்பு! தமிழகத்திலிருந்து செல்வது எப்படி?

    April 22, 2026

    ஐபிஎல் 2026 புள்ளிகள் பட்டியல்: பஞ்சாப் கிங்ஸ் முதலிடம்; ஆர்சிபி இரண்டாம் இடம்!

    April 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»அண்ணாமலை செய்தது மன்னிக்க முடியாத குற்றம்.. உடனே கைது செய்யுங்க : செல்வப்பெருந்தகை பகீர் புகார்!
    தமிழ்நாடு

    அண்ணாமலை செய்தது மன்னிக்க முடியாத குற்றம்.. உடனே கைது செய்யுங்க : செல்வப்பெருந்தகை பகீர் புகார்!

    Prime ReporterBy Prime ReporterFebruary 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Annamalai committed an unforgivable crime.. Arrest him immediately Says Selvapperundhagai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அவதூறு பரப்பியல் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

    இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டியில் பள்ளி மாணவி லாவண்யா கடந்த 2022 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். மதமாற்ற அழுத்தம் காரணமாகவே அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக அப்போது பா.ஜ.க. மாநில தலைவராக இருந்த அண்ணாமலை ஆதாரமற்ற அவதூறு கருத்துக்களை கூறியது, தற்போது சி.பி.ஐ. விசாரணையின் மூலம் அம்பலமாகியுள்ளது.

    தூய இருதய மேல்நிலை பள்ளியில் படித்து வந்த மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டது மதமாற்ற அழுத்தத்தினால் இல்லை என்று சி.பி.ஐ. தனது அறிக்கையில் கூறியிருக்கிறது.

    ஆனால், பா.ஜ.க.வினர் மாணவி கட்டாய மதமாற்றம் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டி பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தினர்.

    இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் கிடையாது என்பதை சி.பி.ஐ. உறுதி செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் மாணவியின் மரணத்திற்கு மதமாற்றம் என்பது காரணம் கிடையாது என்று தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.

    இந்நிலையில், அண்ணாமலையின் இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டு மூலமாக மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து, மத அமைதிக்கு கேடு விளைவித்து அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடியது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

    Annamalai committed an unforgivable crime.. Arrest him immediately Says Selvapperundhagai

    இதன்மூலம் பா.ஜ.க.வின் கீழ்த்தரமான மதவெறுப்பு அரசியல் வெளிப்பட்டிருக்கிறது. பா.ஜ.க.வின் அப்போதைய மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாவட்ட பா.ஜ.க. தலைவர் உள்ளிட்டோர் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இது மதமாற்ற தற்கொலை என்று முத்திரை குத்தி, தமிழ்நாட்டின் மதநல்லிணக்கத்திற்கும், அமைதிக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்ற வகையில் இச்சம்பவம் அரசியலாக்கப்பட்டது.
    மகளை இழந்து துயரத்தில் இருந்த பெற்றோரை ஆறுதல்படுத்தாமல் அவர்களை தவறாக வழிநடத்தி, மகளின் உடலைப் பெற விடாமல் தடுத்து போராட்டக் களத்திற்கு இழுத்து வந்த பா.ஜ.க. தலைவரின் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும்.

    தமிழ்நாட்டில் பல ஆண்டுகாலமாக கல்விச் சேவை மூலம், சிறுபான்மை கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் ஏழை,எளிய மக்களுக்கு ஆற்றி வருகிற தூய்மையான பணியை கொச்சைப்படுத்துகிற வகையில் மதமாற்றத்திற்கு துணை போகிறார்கள் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறி மதநல்லிணக்கத்தை சீர்குலைத்த அண்ணாமலையின் செயல் சி.பி.ஐ. விசாரணையின் மூலமாக அம்பலத்திற்கு வந்துள்ளது.

    இத்தகைய சட்டவிரோத செயல்களை செய்து மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க முயன்ற அன்றைய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மாவட்ட பா.ஜ.க. தலைவர் ஆகியோர் மீது தமிழ்நாடு காவல்துறை உடனடியாக வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பட்டுள்ளார்.

    annamalai BJP Congress Politics Selvaperunthagai அண்ணாமலை அரசியல் காங்கிரஸ் செல்வப்பெருந்தகை தமிழக பாஜக
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வென்று வா தலைவா.. சத்யராஜ் பேச்சுக்கு பதிலடியாக விஜய்க்கு சிபிராஜ் எழுதிய கடிதம்..!

    April 22, 2026

    குழந்தைகளை அரசியலில் இழுக்கலாமா?.. விஜய்யை விளாசிய ரங்கராஜ் பாண்டே..! (வீடியோ)

    April 22, 2026

    எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த விஜய்.. ADMK கோட்டையில் TVK-வின் அதிரடி வியூகம்..!

    April 22, 2026

    ரத்தம் வந்தும் சிரித்த முகம்.. விஜய்க்கு ரசிகர்கள் கொடுத்த அடுத்தடுத்த அதிர்ச்சிகள்..!

    April 21, 2026

    #WeTrustVIJAY மற்றும் #DMKWinningBig.. களத்தை விட இணையத்தில் அனல் பறக்கும் பிரச்சாரம்..!

    April 21, 2026

    ரஜினி வீட்டு கதவைத் தட்டிய திமுக.. தேர்தல் நேரத்தில் நடந்த முக்கிய சந்திப்பு பின்னணி..!

    April 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    182 பதற்றமான வாக்குச்சாவடிகள்.. 48 மணி நேர SOP-ஐ கையில் எடுத்த கோவை கலெக்டர்..!

    April 22, 2026

    எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த விஜய்.. ADMK கோட்டையில் TVK-வின் அதிரடி வியூகம்..!

    April 22, 2026

    ஒரே அசிங்கமா போச்சே.. தமன்னாவை திணறடித்த ரசிகர்..! (வீடியோ)

    April 22, 2026

    மாம்பழம் கலரை பார்த்து ஏமாறாதீங்க.. கல் வைத்து பழுக்க வைத்ததை கண்டறியும் வழிகள்..!

    April 22, 2026

    டாஸ்மாக் மூடியிருந்தாலும் “சரக்கு” ரெடி.. ரூ.12 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் – 3 பேர் கைது..!

    April 22, 2026
    Don't Miss

    மத்திய அரசு வேலை: SSC Phase XIV 2026 அறிவிப்பு வெளியீடு! 2,919 காலியிடங்கள்

    April 22, 2026

    Staff Selection Commission (SSC) Phase XIV 2026 அறிவிப்பு வெளியீடு—மொத்தம் 2,919 காலியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்; கணினி வழித் தேர்வு (CBE) மூலம் ஆட்சேர்ப்பு நடைபெறும்.

    கேதார்நாத் யாத்திரை 2026: இன்று நடைதிறப்பு! தமிழகத்திலிருந்து செல்வது எப்படி?

    April 22, 2026

    ஐபிஎல் 2026 புள்ளிகள் பட்டியல்: பஞ்சாப் கிங்ஸ் முதலிடம்; ஆர்சிபி இரண்டாம் இடம்!

    April 22, 2026

    அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் நீட்டிப்பு: ட்ரம்ப்பின் நிபந்தனையும், ஈரானின் பதிலடியும்!

    April 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.