Close Menu
    What's Hot

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»”5000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்குழிகள் கருவிகள் கண்டுபிடிப்பு”
    தமிழ்நாடு

    ”5000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்குழிகள் கருவிகள் கண்டுபிடிப்பு”

    Prime ReporterBy Prime ReporterJanuary 5, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை உச்சியில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்காலத்திற்கு முற்பட்ட கோப்பை வடிவக் கற்குழிகள், கருவிகள் மற்றும் ஆயுதங்களை கூர் தீட்டும் கற்குழிகளை தொல்லியியல் ஆய்வாளர் முனைவர் ராஜேந்திரன் கண்டுபிடித்துள்ளதாகவும் அதனை தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையின் ஆய்வு மேற்கொண்டு ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். கோவை பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் துறை உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் முனைவர் ராஜேந்திரன். தொல்லியல் துறையின் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக அது குறித்து படித்து கடந்த 13 ஆண்டுகளாக தொல்லியல் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதில் சிவகங்கை மாவட்டத்தில் 8 இடங்களில் பழங்கால தொல்லியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து பதிவு செய்துள்ளார்.இந்த நிலையில் தற்போது பணியாற்றி வரும் கல்லூரி சார்பில் வழங்கும் Seed Money என்ற நிதி மூலமாக ஆய்வுகள் சமர்பிக்கும் பொருட்டு கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.


    இங்கு மங்குனி, பசிமணி, பசுமணிபுதூர், குஞ்சூர்பதி, பெரும்பதி, பெருக்கபதிபுதூர் ஆகிய 6 கிராமங்கள் உள்ளன. அங்கே இருளர் பழங்குடி மக்கள் வசிக்கின்றனர்.
    இங்கு 250 ஆண்டுகள் பழமையான பாலமலை அரங்கநாதர் ஆலயம் அருகே பெருங்கற்காலத்திற்கு முற்பட்ட கோப்பை வடிவக் கற்குழிகள், கருவிகள் மற்றும் ஆயுங்களை கூர் தீட்டும் கற்குழிகளை கண்டுபிடித்துள்ளார்.
    இது தொடர்பாக அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பல்வேறு தொல்லியல் துறை ஆய்வாளர்கள் பூங்குன்றன், கல்வெட்டு ஆய்வாளர் ஜெகதீசன் மற்றும் கல்வெட்டுக்களை ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வரும் கோவை யாக்கை மரபு அறக்கட்டளையினர் ஆகியோரிடம் காண்பித்து அதனை உறுதி செய்துள்ளார்.
    இது குறித்து ராஜேந்திரன் கூறும்போது கோவை புறநகர் பகுதியில் பெரியநாயக்கன்பாளையம், புதூர், காளப்பட்டி, பெருங்குடி, சின்னங்காவு, ரோமாநிய குன்றுகள், தீர்த்தக்கோடு போன்ற பகுதிகளில் இதற்கு முன்பே பல்வேறு தொல்லியல் சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும்.பாலமலை வனப்பகுதியில் 3 அடி உயரமும் 7 அடி நீளமும் கொண்ட சாம்பல் நிறப் பாறையில் சுமார் 22க்கும் மேற்பட்ட கோப்பை வடிவக் கற்குழிகள் கண்டுபிடித்துள்ளதாகவும், இக்குழிகள் 3 முதல் 10 செ.மீ. ஆழமும், 1 முதல் 7 செ.மீ. அகலமும் கொண்டவையாக இருப்பதாகவும்.


    இதேபோன்று நாட்டின் பல பகுதிகளிலும் உலகின் பல நாடுகளிலும் இத்தகைய கோப்பை வடிவக் கற்குழிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும். இந்த கற்குழிகள் உருவாக்கப்பட்டதற்கான உண்மையான காரணங்களை கண்டறிய முடியவில்லை என்றாலும், அந்த இடம் புனித தளமாகவோ, வானியல், மருத்துவ,ம் வேட்டை, வெற்றி உள்ளிட்டவைகளின் குறியீடுகளாகவும் இருக்கலாம்.இந்த கற்குழிகளுக்கு அருகே மூன்று அடி உயரமும் 7 அடி நீளமும் கொண்ட சாம்பல் நிறப் பாறையில் கல்லாயுதங்களை கூர்மைப்படுத்த பயன்படுத்தப்பட்ட 12 தேய்ப்பு குழிகள் கண்டறிந்துள்ளதாகவும், இச்சான்று புதிய கற்கால கருவிகளை பயன்படுத்திய மக்கள் பாலமலையில் வாழ்ந்திருக்கலாம் என்பதை உறுதிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
    மேலும் இதற்கு அருகே 3 அடி அகலமும் 11 அடி நீளம் கொண்ட பாதையின் மேற்பரப்பில் 15 சென்டிமீட்டர் வட்டமும் 16 சென்டிமீட்டர் ஆழமும் கொண்ட குழி ஒன்று கண்டறிந்துள்ளதாகவும், இக்குழி பழங்கால மனிதர்களின் வாழ்வியல், சமயச் சடங்குகள், தானிய அரைத்தல்,திரவங்கள் சேகரித்தல், வேட்டையாடும் போது உண்டான காயங்களுக்கு அல்லது காய்ச்சல் போன்ற பிற நோய்களுக்கு மருந்து அரைக்கும் குளியாக பயன்படுத்தி இருக்கலாம் என தெரிவித்தார்.மேலும் அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள பாறையில் கற்குழிகள் அருகில் கூர்மையான மற்றும் உருளை வடிவ கருவிகளை கடவுளாக வழிபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


    புதிய கற்கால தரவுகள் கொங்கு மண்டலத்தில் ஒரு சில இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், கோப்பை வடிவ கற்குழி இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதற்கான பதிவுகள் இல்லை. இத்தகைய தொல்பழங்கால சான்றுகளை தன்னகத்தை கொண்டுள்ள பாலமலையின் கீழே கோவனூர் மலையில் 4000 ஆண்டுகளுக்கு பழமையான பாறை ஓவியங்கள் உள்ளன. இதனை தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்து ஆவணப்படுத்தியுள்ளனர்.எனவே இந்த தரவுகள் பாலமலை சுற்றுவட்டார பகுதியில் வரலாற்று காலத்திற்கு முன்பு இருந்தே தொல்பழங்கால மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு சான்றுகளாக அமைகின்றன. ஆகவே இதுகுறித்து மேலும் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும், புதிதாக கண்டறியப்பட்ட இக்கற்குழிகள் கோவை வட்டாரத்தின் தொல்லியல் வரலாற்றில் முக்கிய இடம் பெறும் எனவே தமிழ்நாடு தொல்லியல் துறை இவ்விடங்களை முழுமையாக ஆய்வு செய்து ஆவணப்படுத்தி பாதுக்காக்க வேண்டும் என தொல்லியல் ஆய்வாளர் முனைவர் ராஜேந்திரன் கோரிக்கை எடுத்துள்ளார்.

    5000 Years Old Tools 5000 ஆண்டுகள் பழமை Ancient Civilization Ancient Tools Archaeological Discovery Historical Discovery Megalithic Period Rock Pits Tamil History Tamil Nadu Archaeology கல் கருவிகள் கற்குழிகள் தொல்லியல் கண்டுபிடிப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026

    காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு..!

    September 18, 2026

    இது முதலீட்டுப் பயணமா இல்லை ஜாலியா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி..!

    September 17, 2026

    சூடுபிடிக்கும் இடைத்தேர்தல்.. அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் முக்கியக் கட்சிகள்..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வெளிநாட்டு நிகழ்வில் அரசியல் பெரும்புள்ளியுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை வேண்டுமென்றே கலந்துகொண்டு சேட்டை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.