தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவரான சமந்தா, தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் துணிச்சலான கருத்துகளால் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். நாக சைதன்யாவுடனான விவாகரத்து, மையோசிடிஸ் பாதிப்பு போன்ற கடினமான காலகட்டங்களை வெற்றிகரமாகக் கடந்த அவர், இயக்குநர் ராஜ் நிடிமோருவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
கையில் இரும்புக் கம்பியுடன் வாகனங்களை அடித்து நொறுக்கிய நபர்..!
தற்போது கர்ப்பமாக இருக்கும் அவர், திரைப்படப் பணிகளில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுத்திருந்தாலும், சமூக வலைதளங்கள் மூலம் தனது சிந்தனைகளையும் கருத்துகளையும் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்துக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. நம் சமூகத்தில் நிலவும் இரட்டை வேடங்கள் மற்றும் பாரபட்சமான விமர்சனங்களைச் சாடியுள்ள அவர், “பாலியல் தொழிலாளர்களை மட்டும் விமர்சிக்கும் இந்தச் சமூகம், அங்கே செல்லும் வாடிக்கையாளர்களைப் பற்றிப் பேசுவதில்லை.
அதுபோல, குழந்தைகளைத் தனியாக வளர்க்கும் சிங்கிள் பெற்றோர்களைக் குறைகூறும் இதே சமூகம், பொறுப்பின்றிப் பாதியில் விலகிச் செல்லும் தந்தைகளைப் பற்றி எங்குமே பேசுவதில்லை. வன்கொடுமைகளுக்கு ஆளானவர்களைக் கேள்வி கேட்கும் கூட்டம், அந்தத் குற்றத்தைச் செய்தவனை விட்டுவிடுகிறது. இந்த நிலை மாற வேண்டும்” எனத் துணிச்சலாகக் குரல் கொடுத்துள்ளார். சமந்தாவின் இந்தப் பதிவுக்கு நெட்டிசன்கள் மத்தியில் ஆதரவும் பாராட்டும் குவிந்து வருகின்றன.

