தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் தீப்பற்றி எரியும் சூழலில், பிரச்சாரத்தின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சுக்கள் பெரும் விவாதத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளன. தவெக வேட்பாளர் சத்தியபாமாவை விமர்சிக்கும் வகையில் அவரது உருவ அமைப்பைக் குறிப்பிட்டு மு.க.ஸ்டாலின் பேசியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர் வன்னி அரசு, “ஆணாதிக்கம் மிகுந்த சமூகச் சூழலில் பெண்கள், குறிப்பாக விளிம்புநிலை மற்றும் தலித் பெண்கள் பொது வாழ்க்கைக்கு வருவதே பெரும் போராட்டமாக உள்ள நிலையில், அவர்களை முடக்கும் விதமாக உருவக்கேலி செய்வது கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்தார்.
ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிடுவதா?.. சீமானின் பேச்சால் சூடுபிடித்த தேர்தல் களம்..!
மேலும், பெண்களின் பாதுகாப்பிற்காக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொண்டுவந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தை சுட்டிக்காட்டிய அவர், தந்தையின் வழியைப் பின்பற்றி நடப்பதாகக் கூறும் மூத்த தலைவர் ஒருவர் இவ்வாறு பேசியிருப்பது அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ளார். தவெக மற்றும் பல்வேறு தரப்பினரும் மு.க.ஸ்டாலினின் இந்தப் பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி வருவதால் தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.

