தமிழ் திரையுலகின் இருபெரும் தூண்களாக விளங்கிய இயக்குநர் இமயம் பாரதிராஜா மற்றும் திரைக்கதை மன்னன் பாக்யராஜ் ஆகியோரின் அடுத்தடுத்த மறைவு ஒட்டுமொத்த கோலிவுட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர்களின் இழப்பைத் தாங்க முடியாமல் திரைத்துறையினர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வரும் நிலையில், தனியார் யூடியூப் சேனல் சார்பில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் உலகநாயகன் கமல்ஹாசன், நடிகர் நெப்போலியன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டு தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
விரைவில் கெட்டிமேளம்.. காதலை உறுதிப்படுத்திய ஜோடிக்குக் குவிந்த வாழ்த்துகள்..!
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகர் நெப்போலியன், தனது குருநாதரான பாரதிராஜாவுடன் இருந்த பிணைப்பு குறித்தும், தனக்கு ‘நெப்போலியன்’ எனப் பெயரிட்ட விதம் குறித்தும் உருக்கமாகப் பேசினார். “1990-ல் என்னை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா சார். அவர் எனக்குத் தந்தை ஸ்தானத்தில் இருந்தார். எனது குடும்ப நிகழ்வுகள் அனைத்திலும் அவர் கலந்துகொண்டுள்ளார்” எனக் குறிப்பிட்ட அவர், பாரதிராஜாவின் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாமல்தான் அவரது அன்புச் சீடரான பாக்யராஜும் மரணமடைந்தார் என்றார்.
மேலும், அமெரிக்காவில் தனது மகனைப் பார்ப்பதற்காக நான்கு மணி நேரம் பயணம் செய்து நேரில் வந்து நலம் விசாரித்த பாக்யராஜின் நல்ல உள்ளம் குறித்தும் நெப்போலியன் கண் கலங்கிப் பேசியது பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

