தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும், வசீகர நாயகியாகவும் வலம் வந்த குஷ்பூ இன்று தனது 56வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். மும்பையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், தமிழில் ‘தர்மத்தின் தலைவன்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, ‘வருஷம் 16’, ‘வெற்றிவிழா’ போன்ற தொடர் வெற்றிப் படங்கள் மூலம் தென்னிந்தியத் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்திக், பிரபு என அப்போதைய முன்னணி நாயகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்த பெருமை இவருக்கு உண்டு.
தமிழில் ‘தர்மத்தின் தலைவன்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர், ‘வருஷம் 16’, ‘வெற்றிவிழா’ போன்ற படங்களின் மூலம் தமிழ் திரையுலகின் முன்னணி நாயகியாக உயர்ந்தார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்திக், பிரபு, சத்யராஜ் என அப்போதைய முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்து தென்னிந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை ஈர்த்தார்.
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘முறைமாமன்’ படத்தின் போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மலர்ந்து, பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
சாலையில் நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த கார்.. உறைந்துபோன பொதுமக்கள்..!
சினிமாவில் இருந்து அரசியலுக்கு முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அவர், தற்போது பாஜகவில் முக்கியப் பொறுப்புகளில் செயலாற்றி வருகிறார். இவரது மொத்த சொத்து மதிப்பு தோராயமாக 80 முதல் 100 கோடி ரூபாய் வரை இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிறந்தநாளைக் கொண்டாடும் குஷ்பூவுக்குத் திரையுலகினரும் பொதுமக்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

