‘ஜெமினி’, ‘அன்பே சிவம்’, ‘வின்னர்’ உள்ளிட்ட பல வெற்றிகரமான திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை கிரண் ரத்தோட். வெள்ளித்திரையில் வாய்ப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வரும் இவர், தனது கவர்ச்சிகரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் அடிக்கடி இணையத்தின் ஹாட் டாப்பிக்காக மாறுவது வழக்கம்.
அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு புதிய அறிவிப்பு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கிரண் பகிர்ந்துள்ள விளம்பரப் போஸ்டரில், “KIRAN RATHOD PRIVATE WORLD” என்ற பெயரில் ‘VVIP Membership’ தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரை பின்னணியில் உள்ள தனது கவர்ச்சிப் புகைப்படத்துடன் பகிரப்பட்டுள்ள இந்த விளம்பரத்தில், ஒரு வருட மெம்பர்ஷிப் கட்டணமாக ரூ.99,999 (கிட்டத்தட்ட 1 லட்சம் ரூபாய்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..
இந்தத் தொகையைச் செலுத்தி விஐபி உறுப்பினராகும் ரசிகர்களுக்கு, தம்முடன் நேரடி வீடியோ கால் பேசுவது, பிரத்யேக குழுவில் இணைவது, எங்குமில்லாத பிரத்யேக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்ப்பது போன்ற பல சலுகைகள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். விளம்பரம் வெளியான சில மணி நேரங்களிலேயே சோஷியல் மீடியாவில் இது வைரலாகி, ரசிகர்களிடையே காரசாரமான விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

