நடிகர் கருணாஸ் தன் மாமனாருடன் தனக்கு இருக்கும் பாசப் பிணைப்பைக் குறித்துப் பேசும்போது, வயது வித்தியாசமின்றி அவர் காட்டும் அன்பும் பாசமும் மிகவும் தூய்மையானது என்றும், அந்த உதட்டோடு உதடு முத்தம் என்பது மாமனாரின் அலாதியான பாசத்தின் வெளிப்பாடு என்பதால் தனக்கு அதில் எந்தத் தயக்கமும் அருவருப்பும் தோன்றுவதில்லை என்றும் மனம் திறந்து கூறியுள்ளார்.
கருணாஸின் இந்தப் பேட்டி இணையத்தில் வெளியானதுடன், இது குறித்த நெட்டிசன்களின் கருத்துகளும் மீம்களும் சினிமா வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தையும் சிரிப்பலையையும் ஏற்படுத்தியுள்ளது.
வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!
முன்னதாக, தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ள நடிகர் கருணாஸ், தனது மாமனார் பெஞ்சமின் தன்னைச் சந்திக்கும் போதெல்லாம் உதட்டோடு உதடு வைத்து (Lip-to-lip) முத்தம் கொடுப்பதாகவும், ஆரம்பத்தில் இது விசித்திரமாக இருந்தாலும் இப்போது அது தனக்கு எந்தவிதமான அருவருப்பையும் ஏற்படுத்துவதில்லை என்றும் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
இந்தச் சுவாரஸ்யமான மற்றும் வித்தியாசமான தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு ட்ரெண்டாகி வருகிறது.

