யூடியூப் வெப் தொடர் மூலம் ‘பவி டீச்சர்’ என்று அறியப்பட்டு, பின்னர் ‘மாஸ்டர்’, ‘இரவின் நிழல்’, ‘கருடன்’ போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்த நடிகை பிரிகிடா சாகாவுக்கும், ‘மீசையை முறுக்கு’ பட நடிகர் மற்றும் இயக்குநர் ஆனந்த் ராமுக்கும் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.
நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த இவர்கள், இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஜூலை மாதம் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட நிலையில், தற்போது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
எம்.எஸ். சுப்புலட்சுமியாக மாறும் ராஷ்மிகா மந்தனா – பிரம்மாண்டமான பயோபிக் அறிவிப்பு..!
பாரம்பரிய மணக்கோலத்தில் இருக்கும் தங்களது திருமணப் புகைப்படங்களை நடிகை பிரிகிடா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட, அவை இணையத்தில் தீயாய் பரவி வருவதுடன் திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை மழையாகப் பொழிந்து வருகின்றனர்.

