காலை உணவுத் திட்டப் பெயர்ப்பலகை மாற்றும் செலவை ஆசிரியர்கள் மீது சுமத்துவதைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ஆசிரியர்களின் மீது நிதிச் சுமையை ஏற்றுவதும், அவர்களைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் மனநிலையையும் இந்த அரசு உடனடியாக கைவிட முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறி உள்ளார்.
இதுகுறித்து கூறியதாவது:-
நிர்வாகத் திறனற்ற Take Diversion அரசு பெயர் மாற்றத்தில் காட்டும் ஆர்வத்தை முறையான நிதி ஒதுக்கீட்டில் காட்டுவதில்லை! முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்து, அதற்கான பெயர்ப் பலகை மாற்றுவதற்கான செலவை ஆசிரியர்கள் மீதே சுமத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. Board-ஐ மாற்றச் செலவு செய்வதோடு மட்டுமல்லாமல், மாற்றியதற்கான ஆதாரமாகப் பெயர்ப் பலகையோடு நின்று புகைப்படமும் எடுத்து அனுப்ப வேண்டுமாம்! இதுபோல ஆசிரியர்களின் மீது நிதிச் சுமையை ஏற்றுவதும், அவர்களைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் மனநிலையையும் இந்த அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிர்வாகத் திறனற்ற Take Diversion அரசு பெயர் மாற்றத்தில் காட்டும் ஆர்வத்தை முறையான நிதி ஒதுக்கீட்டில் காட்டுவதில்லை!
— Dr. Anbil Mahesh (@Anbil_Mahesh) September 12, 2026
முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்து, அதற்கான பெயர்ப் பலகை மாற்றுவதற்கான செலவை ஆசிரியர்கள் மீதே…

