Close Menu
    What's Hot

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»விநாயகர் சதுர்த்தியை முடக்குகிறதா அரசு?.. நயினார் நாகேந்திரன் கண்டனம்..!
    தமிழ்நாடு

    விநாயகர் சதுர்த்தியை முடக்குகிறதா அரசு?.. நயினார் நாகேந்திரன் கண்டனம்..!

    Prime ReporterBy Prime ReporterSeptember 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    free-electricity-vinayagar-chathurthi-pandals-tamil-nadu-govt-criticism
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

    ஆந்திராவைப் போலத் தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்திப் பந்தல்களுக்கு இலவச மின்சாரம் வழங்குக! “பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா!” என்று விநாயகப் பெருமானிடம் சங்கத் தமிழையே வரமாகக் கேட்டார் ஔவையார். அப்படித் தமிழ் மொழியோடு பின்னிப் பிணைந்த முழுமுதற் கடவுள்தான் நம் விநாயகப் பெருமான்.

    அந்த வேழமுகத்தோனின் திருவிழாவை உலக மக்கள் அனைவரும் பக்திப் பரவசத்துடன் கொண்டாடத் தயாராகி வரும் வேளையில், அத்திருவிழாவை மறைமுகமாக முடக்கும் வேலையில் முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களின் அரசு ஈடுபடுகிறதோ என்கிற வலுவான ஐயம் எழுகிறது. பொதுமக்கள் தங்களின் பக்தி உணர்வோடு அமைக்கும் வழிபாட்டுப் பந்தல்களுக்கு, தற்காலிக மின் இணைப்பு மீட்டருக்கு ₹3,800, ‘டெபாசிட்’ தொகையாக ₹4,000 செலுத்த வேண்டியுள்ளது.

    அடுத்த சாரி எப்போ வரும் ப்ரோ?.. ஸ்டாலின் வீடியோவை பார்த்துக் கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்..!

    அதோடு வயரிங் செலவு உள்ளிட்ட பணிகளுக்கென ஒரு விநாயகர் சிலை மின் இணைப்புக்கு மட்டுமே சுமார் ₹15,000 வரை செலவாவதோடு, ‘கமர்சியல்’ கட்டணம் என்ற பெயரில் கூடுதல் சுமை சுமத்தப்படுவதாக விழா அமைப்பாளர்களும் பொதுமக்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

    அண்டை மாநிலமான ஆந்திராவில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு எவ்விதத் தடையுமின்றி அரசே முன்வந்து இலவச மின்சாரம் வழங்கிப் பக்தர்களை உற்சாகப்படுத்தும் வேளையில், தமிழகத்தில் மட்டும் இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளை நசுக்கும் வகையில் தவெக அரசு செயல்படுவதாக மக்கள் நினைக்கின்றனர்.

    எனவே, முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் அரசு வணிகக் கட்டண முறையை ரத்து செய்வதோடு, விநாயகர் சதுர்த்திப் பந்தல்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி இலவச மின்சாரம் வழங்கிட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்!

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆந்திராவைப் போலத் தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்திப் பந்தல்களுக்கு இலவச மின்சாரம் வழங்குக!

    "பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
    நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – நீ எனக்குச்
    சங்கத் தமிழ் மூன்றும் தா!"

    என்று விநாயகப் பெருமானிடம் சங்கத் தமிழையே வரமாகக் கேட்டார் ஔவையார்.… pic.twitter.com/zVJC3JrOuY

    — Nainar Nagenthran (@NainarBJP) September 12, 2026

    TN government pandal electricity charges demand TVK Vijay government criticism 2026 Vinayagar Chathurthi free electricity Tamil Nadu Vinayagar pandal temporary meter deposit cost தமிழக அரசு விநாயகர் பந்தல் மின் இணைப்பு கட்டணம் விநாயகர் சதுர்த்தி இலவச மின்சாரம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026

    காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு..!

    September 18, 2026

    இது முதலீட்டுப் பயணமா இல்லை ஜாலியா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி..!

    September 17, 2026

    சூடுபிடிக்கும் இடைத்தேர்தல்.. அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் முக்கியக் கட்சிகள்..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வெளிநாட்டு நிகழ்வில் அரசியல் பெரும்புள்ளியுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை வேண்டுமென்றே கலந்துகொண்டு சேட்டை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.