தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, முதல்வர் விஜய் வெளிப்படுத்திய உடல்மொழி மற்றும் மிசா காலம் குறித்தான அவரது பேச்சு அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதான தாக்குதலைக் கிண்டல் செய்யும் வகையில் அந்த சைகை இருந்ததாகக் கண்டனங்கள் எழுந்தன.
லண்டனில் விஜய்.. சங்கீதா, அஜித் மற்றும் த்ரிஷாவை சந்திப்பாரா?..
இதற்கு விளக்கம் அளித்து விஜய் ட்விட்டரில் பதிவிட்டிருந்த நிலையில், மு.க.ஸ்டாலின் நீண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “விஜய் முதலமைச்சரான பிறகு என் வீட்டிற்கு வந்தபோது, தேர்தல் பிரசாரத்தில் தன்னை அதிகமாக விமர்சித்ததற்காக ‘ஐ அம் சாரி’ என்று சொன்னார். நான் அதை பெரிதுபடுத்த வேண்டாம் பிரதர் என்று கூறினேன். ஆனால், சட்டப்பேரவையின் மாண்பை மறந்து முதல்வர் பொறுப்புடன் விஜய் செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
ஸ்டாலினின் இந்த வைரல் வீடியோவைப் பகிர்ந்துள்ள பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், “விஜய் இதுவரை இரண்டு முறை ஸ்டாலினிடம் சாரி கேட்டுள்ளார். அடுத்த சாரி எப்போ வரும் ப்ரோ?” என தனது எக்ஸ் பக்கத்தில் கிண்டலாகக் கேள்வி எழுப்பி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளார்.
விஜய் குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ.
— Blue Sattai Maran (@tamiltalkies) September 10, 2026
'சாரி மட்டும் சொன்னா போதுமா சார்? ' என ஸ்டாலினை கேட்ட விஜய்..
இதுவரை இரண்டு முறை ஸ்டாலினிடம் சாரி கேட்டுள்ளார்.
அடுத்த சாரி எப்ப வரும் ப்ரோ?
pic.twitter.com/m61gx5ir5g

