தமிழ்நாட்டில் உள்ள தகுதியான குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நலிந்த பிரிவினர் மற்றும் குடும்பத் தலைவிகளின் நிதிச்சுமையைக் குறைக்கும் வகையில், ‘அன்னப்பூரணி சூப்பர் 6’ திட்டத்தின் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும் எனச் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கு மிகாமல் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள், சிறு குறு விவசாயக் குடும்பங்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்பங்கள் உள்ளிட்ட சுமார் 1.30 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் இத்திட்டின் மூலம் முழுமையாகப் பயனடைவார்கள்.
வலி உங்களை எச்சரிக்கிறது! அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகள்!
பயனாளிகள் எரிவாயு சிலிண்டரைப் பதிவு செய்து பெற்றுக்கொண்ட பிறகு, அதற்கான தொகை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டு, நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இத்திட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 2027 பொங்கல் பண்டிகையை (ஜனவரி மாதம்) முன்னிட்டு இது முழுமையான செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்படும். இதற்காக ஆண்டுதோறும் தோராயமாக ரூ. 4,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
இத்திட்டம் ‘அன்னப்பூரணி சூப்பர் 6’ திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான செலவுத் தொகையானது நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வரும் பொங்கல் பண்டிகை முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

