ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம், ஆகஸ்ட் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தனது வாழ்க்கையின் மிகப்பெரிய தூண் தனது அம்மாதான் என்று ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அவர் 24/7 தன் மீதும் தன் சகோதரி மீதும் அக்கறை கொண்டிருப்பதாகவும், தினமும் போன் செய்து நலம் விசாரிப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அப்பா விஜய் மற்றும் அம்மா சங்கீதாவிடம் தனது எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள தனக்குச் சிறு தயக்கம் இருப்பதாகவும், அதே சமயம் தனது சகோதரியிடம் மட்டுமே அனைத்தையும் மனம் திறந்து பேசுவதாகவும் அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
43 வயதிலும் குறையாத அழகு.. இன்ஸ்டாவை அதிரவிடும் சென்னை 28 விஜயலட்சுமி..!
விஜய் – சங்கீதா விவாகரத்து மனு வாபஸ் பெறப்பட்டதால் அவர்கள் மீண்டும் இணைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஆகஸ்ட் 15-ஆம் தேதி விஜய் கொடியேற்றிய நிகழ்வில் சங்கீதா பங்கேற்காததும், திரிஷா உடனிருந்ததுமான சூழல் ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

